இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்பட இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட் பிரபலம் அர்னால்ட் கலந்துகொள்வதை தற்போது ஒரு வீடியோ பதிவின் மூலம் அர்னால்டே உறுதி செய்துள்ளார்.
ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிப்பில், விக்ரம், ஏமி ஜாக்சன் ஆகியோர் நடிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள ‘ஐ’ திரைப்படத்தின் இசை வெளியீடு, வரும் செப்டம்பர் 15-ஆம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. மிகப் பிரம்மாண்டமாக தயாராகியுள்ள இந்தப் படத்தின் இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருந்த ஆஸ்கர் ரவிச்சந்திரன், தமிழ் இசை வெளியீட்டிற்கு ஹாலிவுட் பிரபலம் அர்னால்டையும், தெலுங்கு ஆடியோ வெளியீட்டிற்கு ஜாக்கிச்சானையும் அழைத்திருப்பதாக ஏற்கனவே ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
தற்போது, அர்னால்ட், வீடியோவின் மூலம், இயக்குநர் ஷங்கரையும், ‘ஐ’ படத்தின் காட்சிகளையும் புகழ்ந்துள்ள அர்னால்ட், இசை வெளியீட்டிற்கு தான் சென்னை வரப்போவதை உறுதி செய்துள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி
