சினிமா

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம்?

சிம்பு, நயன்தாரா திடீர் திருமணம் செய்து கொண்டதாக சினிமா உலகில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இருவரும் 2006 ம் ஆண்டு ஒரு படத்தில் ஜோடியாக நடித்த போது காதலிக்கத் தொடங்கினர். ஜோடியாகவும் சுற்றினார்கள். ஆனால் சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, காதலை முறித்துக் கொண்டதாக பகிரங்கமாக அறிவித்தனர்.பிறகு ஹன்சிகா, சிம்பு இடையே காதல் மலர்ந்தது. நயன்தாராவுக்கும், பிரபுதேவாவும் காதல் வயப்பட்டார்கள். இப்போது இந்த காதலும் …

மேலும் படிக்க

மறுபடியுமா! நடிகை அஞ்சலி மாயம்?

நடிகை அஞ்சலி மீண்டும் மாயமாகி விட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் படங்களில் நடித்து வந்த அஞ்சலி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் சென்னையில் வீட்டில் இருந்து வெளியேறினார். சித்தி கொடுமைப்படுத்தியதாக பரபரப்பு குற்றச்சாட்டுகளையும் கூறினார். சில நாட்கள் தலைமறைவாக இருந்த அவர் பின்னர் ஐதராபாத் போலீசில் ஆஜரானார். அதன் பிறகு ஐதராபாத்திலேயே தங்கி இருந்தார்.  இந்த நிலையில் சமீப காலமாக அஞ்சலியை ஐதராபாத்திலும் காணவில்லை. மீண்டும் அவர் மாயமாகி …

மேலும் படிக்க

காப்பி அடிக்கவில்லை: கமல்

பிரெஞ்சு போட்டோகிராபரின் படத்தை பார்த்து தனது பட போஸ்டரை வடிவமைக்கவில்லை என்றார் கமல். உத்தமவில்லன் படத்திற்காக கமல்ஹாசன் வித்தியாசமான மேக்அப் அணிந்திருந்த படம் வெளியானது. இது பிரெஞ்ச் போட்டோகிராபர் எடுத்த போட்டோவை பார்த்து காப்பி அடித்திருப்பதாக இணைய தளங்களில் விமர்சனம் வெளியானது. இது குறித்து கமலிடம் கேட்டபோது அவர் கூறியது, தேயம் என்ற பழங்கால கலை ஆயிரம் வருடமாக இங்குள்ளது. கலைநயத்துடன் கூடிய இந்த ஆட்டத்தை ஆடும் பாரம்பரியத்தை சேர்ந்த …

மேலும் படிக்க

ஆயிரத்தில் ஒருவன் சினிமா குறித்த அரசியல் சர்ச்சை

1965 இல் வெளியாகிய ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், தற்போது டிஜிட்டல் தொழில்நுட்ப உதவியுடன் புதுப்பிக்கப்பட்டு ரிலீஸ் செய்யப்பட உள்ள நிலையில், அந்த படம் குறித்த ஒரு அரசியல் சர்ச்சை தொடங்கியிருக்கிறது. தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மற்றும் தற்போதைய தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோர் முதல் முறையாக இணைந்து நடித்த இந்தத் திரைப்படத்துக்கு பொது இடங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்,  ஏப்ரலில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுக்கான ”மாதிரி நன்னடத்தை விதி மீறல்” …

மேலும் படிக்க

ஐட்யூனில் கோச்சடையான் இசை முதலிடம்!

ஐட்யூன் டவுன்லோடில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் கோச்சடையான் இசை முதலிடம் பிடித்துள்ளது. கோச்சடையான் இசை வெளியீட்டு விழா மார்ச் 9-ம் தேதி நடந்தது. ஆனால் அதற்கு சில மணி நேரங்கள் முன்பே சிடிகள் விற்பனைக்கு வந்துவிட்டன. ஐ ட்யூனிலும் டவுன்லோடு செய்யும் வசதி தரப்பட்டது. அடுத்த சில மணி நேரங்களில் கோச்சடையான் இசைதான் இந்திய அளவில் ஐட்யூனில் முதலிடத்தைப் பிடித்தது. ரஜினி நடித்த எந்திரன் படத்திற்கு பிறகு ஐடியூனில் இடம் …

மேலும் படிக்க

கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா – மார்ச் 9

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தீபிகா படுகோன் நடிக்கும் கோச்சடையான் படத்தின் இசைவெளியீட்டுவிழா மார்ச் 9 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணிக்கு சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெறவிருக்கிறது. அவ்விழாவில் கோச்சடையான் தமிழ்ப்படத்தின் இசை மட்டுமின்றி கோச்சடையான் தெலுங்குப்படத்தின் இசையும் வெளியிடப்படுகிறது. அதுமட்டுமல்ல, தமிழ், தெலுங்கு, மற்றும் ஹிந்தி என மூன்று மொழிகளில் கோச்சடையான் படத்தின் டிரெய்லரும் அவ்விழாவில் வெளியிடப்படுகிறது. அதோடு, கோச்சடையான் படத்தின் மற்றொரு ஸ்பான்ஸரான ஹங்காமா ஆன்லைன் …

மேலும் படிக்க