வாக்காளர் பட்டியலை நூறு சதவீதம் பிழையின்றி தயாரிக்கவும், போலி வாக்காளர்களை கணினி தொழில்நுட்பத்தில் நீக்கவும் தமிழக தலைமைத் தேர்தல் அலுவலகம் முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் தற்போது வாக்காளர் பட்டியல் சுருக்க முறைத் திருத்தம் நடந்து வருகிறது. இந்த திருத்தப் பணிகள் நவம்பர் 10-ம் தேதி முடிவடைகிறது. இந்நிலையில், வாக்காளர் திருத்தப் பணிகளில் பல்வேறு பிழைகள் ஏற்படுகின்றன. பெயர், எழுத்து, முகவரி, புகைப்படம், வார்டு என பல வகைகளில் தவறுகள் ஏற்படுகின்றன. …
மேலும் படிக்கமோசமான சாலையால் அம்பத்தூர் மக்கள் அவதி
சென்னை மாநகராட்சியுடன் அம்பத்தூர் நகராட்சி இணைக்கப்பட்டு 3 ஆண்டாகிறது. 7வது மண்டலமான அம்பத்தூரில் 15 வார்டுகள் உள்ளன. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அம்பத்தூர், கொரட்டூர், மண்ணூர்பேட்டை, மங்கலபுரம், பட்டரைவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கணக்கான முக்கிய சாலைகள், குறுக்கு சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. தற்போது பெய்து வரும் பருவ மழையால் சாலைகளும் சேறும் சகதியுமாக மாறி, மக்கள் நடமாட முடியாமல் உள்ளது. வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். …
மேலும் படிக்கஆதார் வழங்க தமிழ்நாட்டில் 469 நிரந்தர மையங்கள்
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை …
மேலும் படிக்கதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று சூரசம்ஹாரம்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு திருச்செந்தூரில் பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். திருச்செந்தூர் முருகன் கோயிலின் தலபுராணப்படி, சூரபத்மனை முருகப் பெருமான் வதம் செய்த இடம் என்பதால் இங்கு சூரசம்ஹாரம் பிரசித்தி பெற்றது. கடந்த 24-ம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது. தினமும் அதிகாலை 3 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப …
மேலும் படிக்ககருப்புப் பணம் வைத்திருப்போர் பட்டியல் : மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களின் பெயர்கள் அடங்கிய பட்டியலை மத்திய அரசு இன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அதில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை வெளியிட உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் வைத்திருக்கும் 627 பேர் கொண்ட பட்டியல் 2 சீலிடப்பட்ட உரைகளில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இதனை மூத்த வழக்குரைஞர் முகுல் ரஸ்தோகி தாக்கல் செய்தார். கருப்புப் பணம் பதுக்கியோர் பெயர் …
மேலும் படிக்கஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்களுக்கு சம்மன்: டில்லி சிபிஐ நீதிமன்றம்
ஏர்செல் – மேக்சிஸ் வழக்கில் மாறன் சகோதரர்கள் உட்பட குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு சம்மன் அனுப்ப டில்லி சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏர்செல் பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்க தயாநிதி மாறன் நெருக்கடி கொடுத்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதற்கு பிரதபலனாக மேக்சிஸ் நிறுவனம் கலாநிதி மாறனுக்கு சொந்தமான நிறுவனத்துக்கு ரூ.3,500 கோடி முதலீடு செய்ததாக வழக்கில் கூறப்பட்டுள்ளது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் 2015 மார்ச் 2ம் தேதி நேரில் ஆஜராக டில்லி சிபிஐ …
மேலும் படிக்கவிண்வெளிக்கு பொருட்களுடன் சென்ற ஆளில்லா ராக்கெட் வெடித்துச் சிதறியது: நாஸா
சர்வதேச விண்வெளி நிலையத்துக்குத் தேவையான பொருள்களை எடுத்துச் சென்ற ஒப்பந்தக்காரர்களுடைய ஆளில்லா ராக்கெட் ஒன்று வெடித்துச் சிதறியதாக அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பு நாஸா தெரிவித்துள்ளது. இந்த ராக்கெட் ஏவப்பட்ட சிறிது நேரத்திலேயே வெடித்துச் சிதறியதாக அது தெரிவித்துள்ளது. சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்துக்கு பொருள்கள் கொண்டு செல்லும் பொறுப்பை தனியார் வசம் கொடுத்த பின் நடந்த முதல் நிகழ்வு இந்த விபத்து என்பது கவனிக்கத்தக்கது. செவ்வாய்க்கிழமை நேற்று விர்ஜீனியாவில் …
மேலும் படிக்ககத்தி படம் பத்திரிக்கையாளர்களுக்கு சங்கடம்: டி.எஸ்.ஆர். சுபாஷ்
சமீபத்தில் வெளியாகியுள்ள கத்தி திரைப்படத்தில் அனைத்துப் பத்திரிகையாளர்களைப்பற்றி விமர்சிப்பது பல பத்திரிகையாளர் தோழர்களுக்கு மன வருத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படம் வெளிவர உறுதுணையாக இருந்த பத்திரிகையாளர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது என தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநிலத் தலைவர் டி.எஸ்.ஆர். சுபாஷ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘ரமணா‘ படத்தின் மூலம் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் பத்திரிகையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் நண்பராக விளங்கினார். அதன்பின் வந்த ‘கஜினி‘ …
மேலும் படிக்கமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி கருணாநிதி சார்பில் ஆட்சியரிடம் ஸ்டாலின் மனு
திருவாரூர் மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி, கருணாநிதி சார்பில் மாவட்ட ஆட்சியர் எம். மதிவாணனிடம் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் திங்கள்கிழமை மனு அளித்தார். திருவாரூரில் கட்சியின் பல்வேறு அணி நிர்வாகிகள், கட்சி சாராதவர்களுடனான கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற ஸ்டாலின், மதிய உணவு இடைவேளையின்போது, மாவட்ட ஆட்சியரகத்துக்குச் சென்றார். அங்கு, ஆட்சியரிடம் கருணாநிதி சார்பில் இந்த கோரிக்கை மனுவை அளிக்கிறேன் என்று கூறி மனு …
மேலும் படிக்ககருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …
மேலும் படிக்க
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி