பொருளாதார குற்றப் பிரிவு போலீஸ் கூடுதல் டி.ஜி.பி. பிரதீப் வி.பிலீப் அண்ணா நகரில் உள்ள அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:–
பொது மக்கள் ஏராளமான மோசடி நிதிநிறுவனங்களில் முதலீடு செய்து ஏமாறுவது வாடிக்கையாகி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் தமிழ்நாடு காவல் துறையில் பொருளாதார குற்றப்பிரிவில் மோசடி தடுப்பு பிரிவு ஒன்று தொடங்கப்பட்டு உள்ளது.
இந்த பிரிவில் பொது மக்கள் போன் செய்து நிதி நிறுவனங்கள் பற்றிய தகவல்களை தெரிந்து கொள்ளலாம். பெரும்பாலான நிதி நிறுவனங்கள் உரிமம் பெறாமலேயே செயல்பட்டு வருகின்றன.
நிதி நிறுவனங்களை நடத்துவதற்கு ரிசர்வ் வங்கியிடம் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். இது போன்ற தகவல்களையும், குறிப்பிட்ட நிறுவனங்கள் மீது வழக்கு ஏதும் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பது பற்றியும் 044–64500155 என்ற எண்ணில் தொடர்பு கொண்டுதெரிந்து கொள்ளலாம்.
இது போன்ற தொழில் நுட்பம் உலகிலேயே தமிழக போலீசில் தான் முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.