சீனாவில் உள்ள தெரு ஒன்றில் இருந்த கடைக்கு ஒருவர் தனது இரண்டு வயது குழந்தையுடன் உட்கார்ந்திருந்தார். தனது மகனை அங்கிருந்த ஒரு நாற்காலியில் உட்காரவைத்துவிட்டு அவர் சிகரெட் பிடித்துக்கொண்டிருந்தார். திடீரென அவரை அவருடைய நண்பர் அழைக்கவே, சிகரெட்டை அங்கேயே வைத்துவிட்டு, நண்பரிடம் சற்று தூரத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
தந்தை சிகரெட் பிடிப்பதை பார்த்துக்கொண்டிருந்த அந்த இரண்டு வயது சிறுவன், தந்தை வைத்துவிட்டு போன சிகரெட்டை எடுத்து ஸ்டைலாக புகைபிடிக்க தொடங்கினான். இந்த காட்சியை பார்த்து அந்த வழியாக சென்றுகொண்டிருந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். வயதான நபர்போல புகையை இழுத்து இழுத்து விடும் ஸ்டைலை பார்த்து அனைவரும் சிரித்தனர். ஆனால் யாரும் அந்த சிறுவனிடம் இருந்து சிகரெட்டை அகற்ற முன்வரவில்லை.
அந்த சிறுவன் சிகரெட் பிடிக்கும் ஸ்டைலை ஒருவர் வீடியோ எடுத்து liveleak.com என்ற இணையத்தில் பதிவு செய்தார். இந்த வீடியோ தற்போது ஆயிரக்கணக்கானோர்களால் பகிரப்பட்டு வருகிறது. சீனாவில் உள்ள மக்கள் தொகையில் 30 சதவிகிதம் பேர் சிகரெட் பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் என்று ஒரு சர்வே கூறுகிறது. சீனாவில் மட்டும் 300 மில்லியன் மக்கள் சிகரெட் புகைக்கும் பழக்கம் உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.