எம்.எஸ்.டோணி – தி அன் டோல்டு ஸ்டோரி படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று வெளியாகியுள்ளது. டோணியின் மனைவி சாக்ஷி இதனை டிவிட்டரில் பகிர்ந்துள்ளார். தோணி படம் போஸ்டர் வெளியானது முதல் ரசிகர்கள் பாராட்டினை அள்ளி குவித்து வருகின்றனர்.
தோணியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் ஒன்று “எம்.எஸ்.டோணி” என்ற பெயரில் பாலிவுட்டில் தயாரிக்கப்பட உள்ளது. பிரபல இயக்குனர் நீரஜ் பாண்டே இயக்கத்தில் வெளிவரவுள்ள இந்த திரைப்படத்தில் சுஹாந்த் சிங் ராஜ்புத், தோணி வேடத்தில் நடிக்க உள்ளார்.டிவி சீரியல் நடிகராக இருந்து பாலிவுட் திரை உலகில் நுழைந்த இவர், பி.கே உள்ளிட்ட பல படங்களில் நடித்து வருகிறார்.
இந்த படத்திற்காக தோணி 40 கோடி கேட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 2015ஆம் ஆண்டு டோணி திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது. அப்படி எனில் அடுத்த ஆண்டு தோணி கிரிக்கெட் விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்று விடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
பல விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை படமாக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தோணியின் வாழ்க்கையும் திரைப் படமாகிறது.
Clearing out all those rumours being carried out past few days.It was all false.. Here you go ….BOOM !!! pic.twitter.com/58vXAGe3Bc
— Sakshi Singh Dhoni (@SaakshiSRawat) September 24, 2014