சங்கர் இயக்கத்தில் விக்ரம், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி வரும் படம் ஐ . சமீபத்தில் ஐ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அர்னால்ட் கலந்துகொண்டார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஐ படத்தின் பாடல்கள் அனைத்தும் பெரும் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், படத்தின் ஹிந்தி இசை வெளியீட்டையும் பிரம்மாண்டமாக நடத்த முயற்சி செய்து வருகின்றனர்.
ஹிந்தி இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்த திட்டம் தீட்டி வருகின்றனர். தமிழ் இசை வெளியீட்டு விழாவில் அர்னல்ட் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது போல் ஹிந்தி ஐ இசை வெளியீட்டு விழாவிற்கு ஹாலிவுட் நாயகன் சில்வஸ்டர் ஸ்டாலனை அழைத்து வருவதற்கு ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முயற்சி செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி