ராக் முன்னாள் அதிபர் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மானுக்கு ISIS தீவிரவாதிகள் மரண தண்டனையை நிறைவேற்றியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஈராக்கில் சன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்த சதாம் உசேன் ஆட்சி செய்து வந்தார். அவரது ஆட்சிக்கு எதிராக 2003ஆம் ஆண்டு அமெரிக்கா போர் தொடுத்தது. இந்தப் போருக்கு ஷியா முஸ்லிம்கள், குர்து இன மக்கள் ஆதரவு கொடுத்தனர்.
பின்னர் பதுங்கு குழி ஒன்றில் மறைந்திருந்த சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். 2006ஆம் ஆண்டு சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டாவர். சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு எழுதியவர் நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான்.
தற்போது ISIS என்ற தீவிரவாத அமைப்பு, ஈராக்கின் பெரும்பாலான நகரங்களை கைப்பற்றியுள்ளனர். இந்த நிலையில்தான் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்த நீதிபதி அப்துல் ரஹ்மானை கைது செய்து அவருக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு மரண தண்டனை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.