போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சார்பில், எழை, எளியவர்களுக்கு “இலவச அரிசி தொகுப்பு பை” வழங்கும் நிகழ்ச்சி 18.05 2021 , வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில், சென்னை, இராயபுரம், காசிமேடு, பெரிய தம்பி மெயின் தெரு வில் வைத்து மிக சிறப்பாக நடைபெற்றது.
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி கெளரவ ஆசிரியருமான ‘ செயல் சிங்கம்” திரு. Ln C. பாலகிருஷ்ணன் முன்னிலையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக N2 காசிமேடு காவல்நிலையம் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் திரு. பொன்ராஜ், இராயபுரம் N1 காவல் நிலையம் சட்டம், ஒழுங்கு ஆய்வாளர் திரு. காசியப்பன், திராவிட முன்னேற்ற கழகம், 50 வட்ட செயலாளர் முனைவர் திரு. சு. சேகர் ஆகியோர் கலந்து கொண்டு பயனாளர்களுக்கு (200 நபர்களுக்கு) அரிசி தொகுப்பு பையினை வழங்கி சிறப்பித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் , மாநில, மாவட்ட இளைஞரணி நிர்வாகிகள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
ஒளிப்பதிவு, செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” K. சங்கர்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி













