போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் சார்பில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது
போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவருமான நட்பின் மகுடம் திரு. MJF Ln Dr லி பரமேஸ்வரன் அவர்களது தலைமையில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி உதவி நிர்வாக ஆசிரியருமான திரு.I. கேசவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள், திரு. பன்னீர்செல்வம, திரு. நடராஜன், திரு. சீனிவாசன் ஆகியோரது ஏற்பாட்டில் ஏழை, எளிய மக்களுக்கு இலவச அரிசி மற்றும் மளிகைப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இன்று 10.06.2021 வியாழக்கிழமை முற்பகல் 11 மணியளவில், பழைய வண்ணை, எம்.எஸ் நாயுடு தெருவில், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் அரிசி, மளிகை சாமான்கள் (150 நபர்களுக்கு) வழங்கினார்கள். இந்நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில துணை செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியர் ” கிங் மேக்கர்” Ln B. செல்வம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில இளைஞரணி தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி துணை ஆசிரியருமான திரு. Ln L வேலாயுதம், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில கண்காணிப்பு குழு தலைவரும், மெட்ரோமேன் மாத இதழின் நிறுவனர் & ஆசிரியருமான திரு.S. அன்பு ஆகியோர் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.
செய்தியாக்கம்:
“ஜீனியஸ்” கே. சங்கர்
ஒளிப்பதிவு: ராஜ்குமார்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி