PPFA ராணிப்பேட்டை மாவட்டம் சார்பாக வெப்பத்தால் தவித்து வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க நீர் மோர் பந்தல்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை கெளரவ ஆசிரியரும், ஜீனியஸ் டீவி தலைவரும், தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கத்தின் மாநில இணை செயலாளரும், சீர்மிகு தலைவருமான ” சேவை நாயகன்- நட்பின் மகுடம்” திரு. MJF Lion Dr லி. பரமேஸ்வரன் அவர்களது ஆலோசனைப்படி,

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் இராணிப்பேட்டை மாவட்டம் சார்பில், எகிறி வருகின்ற வெப்பத்தால் தவித்து வரும் பொதுமக்களின் தாகத்தை தீர்க்க , 01.05.2024, புதன்கிழமை காலை 11 மணியளவில், அரக்கோணம், அருள் பேட்டரி. ஷாப் அருகில், மாவட்ட தலைவர் திரு. Rtn M.S. மான்மல் தலைமை வகித்திட, மாவட்ட செயலாளர் திரு. Rtn PP PHF M.S. குணசீலன் முன்னிலையில், நீர் மோர் பந்தலை திரு. பசலைராஜ் ( காவல்துறை துணை ஆய்வாளர், அரக்கோணம்) அவர்கள் தன் திருக்கரங்களால் துவக்கி வைத்தார்.

இந் நிகழ்வில் மாவட்ட நிர்வாகிகள் திரு. டீ. கமலக்கண்ணன், திரு. சிவசுப்பிரமணிய ராஜா, திரு. மேஜர் சண்முக சுந்தரம், திரு. அண்ணாமலை ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

இந்த தாகம் தீர்க்கும் பந்தலை மாவட்ட நிர்வாகிகளின் முழு பங்களிப்பில் கோடை வெப்பம் தணியும் வரை தொடர உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Check Also

T20 உலகக் கோப்பைக்கான அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒருவர் கூட இடம்பெறவில்லை!..

நடராஜன், சாய் சுதர்சன், அஸ்வின், தினேஷ் கார்த்திக் ஆகியோரில் ஒருவருக்கு கூட வாய்ப்பு தரப்பட வில்லை..* கிரிக்கெட்டிலும் அரசியலா என …