போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா!

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் முப்பெரும் விழா 03.01.2021 ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில், இராயபுரம், சோமு 4 வது தெரு, அவ்வை கலைக்கழகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

தமிழ்த் தாய் வாழ்த்து பாடலுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான “செயல் சிங்கம்” திரு. Ln C.பாலகிருஷ்ணன் அவர்கள் தலைமையுரையுடன் உற்சாகமாக ஆரம்பமானது.

இந் நிகழ்வில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன் அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு, இவரது தாயார் பெயரில் இயங்கும் ” இராஜராஜேஸ்வரி கல்வி அறக்கட்டளை” சார்பில், ஏழை மாணவ மானவியர்களுக்கு ஊக்கத் தொகை, கைம்பெண்களுக்கு தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டது

சிறப்பு விருந்தினர்களாக பங்கு பெற்ற “Gem of India” Dr. J.B. விமல் (மாநில துணை பொதுச் செயலாளர், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன், தாளாளர் & செயலாளர், சிறப்பாசிரியர், ஜீனியஸ் ரிப்போராட்டர் தமிழ் மாத இதழ், ஷேபா குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ், மாநில துணை தவைவர், TNPNMHC Assn.,)

மற்றும் “வாழும் பாரதி” திரு. D.S.R. சுபாஷ் (தேசிய பொதுச் செயலாளர், IJU, மாநில தலைவர், TUJ), MJF Lion K.S. கண்ணன், (முன்னாள் மாவட்ட ஆளுநர், Dist. 324 A5, திரு.Dr. P.சாரநாத் (Legal Advisor, ஷேபா குரூப் ஆஃப் ஸ்கூல்ஸ்), இராயபுரம் லயன்ஸ் கிளப் ஆஃப் ஹெரிடேஜ் தலைவர் திரு. Ln.V.K.ராமச்சந்திரன் ஆகியோரது திருக்கரங்களால் வழங்கப்பட்டது.

இதனை தொடர்ந்து கொரோனா நோய் தொற்றின் போது களப்பணியாற்றிய நிர்வாகிகள் மற்றும் 2020 ஆண்டில் சிறப்பாக செயலாற்றியவர்களை வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகிகள் கெளரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், மாநில மாவட்ட, மகளிர், இளைஞர் அணி நிர்வாகிகள், அரிமா சங்க நிர்வாகிகள் பங்கு கொள்ள நிகழ்ச்சி தொகுப்பினை திரு. B. கார்த்திகேயன், திரு.N.பாலசுந்தரம் ஆகியோர் இணைந்து வழங்கிட, விழாவின் இறுதியில் அனைவரையும் குழுவாக ஒருங்கிணைத்து புகைப்படங்கள் எடுத்தபின், அறுசுவை உணவு வழங்கி உபசரித்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாக்கம்: “ஜீனியஸ்” K. சங்கர்
ஒளிப்பதிவு: K. விக்னேஷ்

Check Also

அன்னையின் நினைவு நாளில்…அன்னதானம்

போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் மாநில தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், ஜீனியஸ் டீவி …