ராஜீவ்காந்தி கொலைக்கைதிகள் 7 பேரை விடுதலை செய்வதாக தமிழக அரசு அறிவித்தது. இதனை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணையின் போது சுப்ரீம் கோர்ட்டு விடுதலை செய்ய தடை விதித்தது. இந்த நிலையில் தமிழக அரசின் இந்த முடிவு பற்றி டெல்லி முன்னாள் முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார்.
அரவிந்த் கெஜ்ரிவால் “இது நடக்கக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். நாம் இது போன்றவர்களை விடுதலை செய்தால், தவறான தகவலை அனுப்புவதாக அமையும்” என்று கூறியுள்ளார். விலைவாசி உயர்வு, கியாஸ் விலை உயர்வு போன்றவற்றையே அரசியலாக்க விரும்புவதாகவும், மதரீதியான அரசியலை செய்ய விரும்ப மாட்டோம் என்று கெஜ்ரிவால் கூறியுள்ளார்.