நமக்கு நாமே விடியல் மீட்பு பிரசாரத்தின் 2ம் நாள் பயணத்தை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கன்னியாகுமரியில் தொடங்கினார். சட்டப்பேரவைத் தேர்தலை கருத்தில் கொண்டு, “நமக்கு நாமே விடியல் மீட்பு” என்ற பெயரில் தமிழகம் முழுவதும், தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், நமக்கு நாமே விடியல் மீட்பு பயணத்தின் சின்னத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். இதையடுத்து கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு இன்று …
மேலும் படிக்கமுலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு
போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உத்தரபிரதேச மாநில ஐ.பி.எஸ். அதிகாரியான அமிதாப் தாக்குருக்கும் மாநில அரசுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டுவந்தது. இந்நிலையில் சமாஜ்வாடி கட்சி தலைவர் முலாயம் சிங் தன்னை மிரட்டியதாக குற்றம்சாட்டிய அமிதாப் தாக்கூர், தனக்கும் முலாயம் சிங்குக்கும் இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ ஒன்றை வெளியிட்டு …
மேலும் படிக்ககாவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிப்பு விஜயகாந்த் குற்றச்சாட்டு
காவிரியில் தண்ணீர் திறந்து விடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் தேர்தல் கூட்டணி பற்றி உரிய நேரத்தில் அறிவிக்கப்படும் என்று தே.மு.தி.க தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். உதகையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்த அவர், உதகை படகு இல்லம் உட்பட தமிழகம் முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களை அரசு மேம்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார். காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்படாததால் டெல்டா விவசாயிகள் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், இதற்கு விரைவில் …
மேலும் படிக்கதேமுதிக யாருடன் கூட்டணி? விஜயகாந்த் பதில்
தே.மு.தி.க. 11-ம் ஆண்டு தொடக்கவிழா, விஜயகாந்தின் பிறந்தநாள் விழா, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகிய முப்பெரும் விழா பொதுக்கூட்டம் கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் தேமுதிக மக்களிடமும், தெய்வத்துடனும்தான் கூட்டணி. வேறு யாரிடமும் கூட்டணி இல்லை என்று கூறினார். இந்த நாள் மிக்க மகிழ்ச்சியான நாள். தே.மு.தி.க. தொடங்கி 10 ஆண்டுகள் …
மேலும் படிக்கஅதிமுகவை மகத்தான வெற்றி பெறச் செய்ய, அண்ணா பிறந்த நாளில் சூளுரை ஏற்க வேண்டும்:ஜெயலலிதா
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா, கழகத் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், ஆயிரம் ஆயிரம் தலைமுறைக்கு தமிழர்கள் தழைத்தோங்கி வாழ்ந்திடப் பிறந்த நம் அன்புக்குரிய பேரறிஞர் அண்ணாவின் 107-ஆவது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இந்த மடல் வழியாக, கழக உடன்பிறப்புகளைச் சந்திப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழ் இனத்தின் முன்னேற்றம் ஒன்றையே தனது வாழ்வின் இலக்காகக் கொண்டு, பேரறிஞர் …
மேலும் படிக்ககாவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் பேச்சு கண்டிக்கத்தக்கது: ஜி.கே.வாசன்
காவிரி பிரச்சினையில் கர்நாடக முதல்வரின் நியாயமற்ற பேச்சு கண்டிக்கத்தக்கது என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை கொடுக்க மாட்டோம் என்று கர்நாடக முதல்வர் அண்மையில் அறிவித்தது கண்டனத்திற்குரியது என கூறியுள்ளார். இது விவசாயிகளுக்கு எதிரானது மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்கும் மாறானது எனவும் கூறியுள்ளார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக காவிரி நடுவர் மன்றத்தை …
மேலும் படிக்கமகப்பேறு கால விடுமுறை 3 மாதத்திலிருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு
மகப்பேறு கால விடுமுறையை 3 மாதங்களில் இருந்து 8 மாதமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய மகளிர் மற்றும் குழந்தை நலத்துறை அமைச்சர் மேனகாவின் கோரிக்கையை ஏற்று அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பணிபுரியும் பெண்களுக்கு தாய்மை அடையும் போது பலவித சிக்கல்களை சந்திக்க நேரிடுகிறது. பிரசவத்திற்கு முந்தைய சிக்கலைவிட பிரசவத்திற்குப் பின்னர் குழந்தையைக் கூட கவனிக்க முடியாமல் மூன்று மாதங்களிலேயே பணிக்கு திரும்ப வேண்டியிருக்கிறது. …
மேலும் படிக்கபுதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …
மேலும் படிக்கஹர்திக் படேலின் இட ஒதுக்கீடு போராட்டம் அபாயகரமானது: வைகோ
படேல் சமூகத்தினரை ஓபிசி பிரிவில் சேர்க்கக் கோரி ஹர்திக் படேல் தெரிவித்துள்ள கருத்துகளும், நடத்தி வரும் போராட்டமும் அபாயகரமானவை. அவரது குரல் மூலம் ஒலிப்பது ஆதிக்கச் சக்திகளின் குரல் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குஜராத் மாநிலத்தில் படேல் சமூகத்தினர் தங்களை இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து, இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் …
மேலும் படிக்கஇளங்கோவன் ஜாமீன் நிபந்தனை ரத்து: உயர் நீதிமன்றம்
காவல்நிலையத்தில் தினமும் கையெழுத்திட வேண்டும் என்ற முன் ஜாமீன் நிபந்தனையை, இளங்கோவனின் கோரிக்கையை ஏற்று, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது வளர்மதி என்பவர் தொடர்ந்த வழக்கில், மதுரை தல்லாக்குளம் காவல்நிலையத்தில் தினமும் இளங்கோவன் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையுடன் முன் ஜாமீன் பெற்றிருந்தார். இந்த நிலையில், நிபந்தனையை தளர்த்தக் கோரி இளங்கோவன் தொடர்ந்த மனுவை விசாரித்த நீதிபதி, மதுரை …
மேலும் படிக்க