[pullquote] குழந்தைத்தனமாக பேசாமல், பிரதமர் பதவிக்கு போட்டியிடும் நீங்கள், அந்த பதவிக்கான மதிப்பை அளிக்க வேண்டும்[/pullquote] அமேதியில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தியை ஆதிரித்து, அவரது சகோதரி பிரியங்கா காந்தி இன்று பேசும்போது, “ராகுல் காந்தி எதிர்காலத்தை பற்றி சிந்திப்பவர். சில எதிர்க்கட்சி தலைவர்கள் இங்கே வருகின்றனர். அவர்கள் தவறான தகவல்களை பரப்பி விடுகின்றனர். ராகுல் குறித்து அவர்கள், “இளவரசர்” என்றும் மற்றொரு சமயத்தில் ‘காமெடியன்’ என்றெல்லாம் விமர்சிக்கின்றனர். …
மேலும் படிக்கதமிழக காங்கிரஸ் களமிறக்கிய நட்சத்திரம் நடிகை மும்தாஜ்!
தமிழக காங்கிரஸ் கட்சி பிரசாரத்துக்காக தமது பிரசார பீரங்கியாக நடிகை மும்தாஜை களம் இறக்கியுள்ளது, அரக்கோணம் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடும் ராஜேஷுக்கு ஆதரவாக ஆற்காடு, ராணிப்பேட்டை, காவேரிப்பாக்கம், அரக்கோணம் ஆகிய இடங்களில் மும்தாஜ் கொஞ்சும் தமிழில் பிரச்சாரம் செய்தார். தொடர்ந்து மும்தாஜ் பேசுகையில், “நமது வேட்பாளர் லண்டனில் படித்தவர், தமிழக மக்களுக்கு உழைப்பதற்காக அங்கிருந்து பிளேன் பிடித்து வந்துள்ளார். அதனால்தான் ராகுல்காந்தி இவருக்கு டிக்கெட் கொடுத்துள்ளார்” என்றார். காங்கிரஸ் …
மேலும் படிக்கபாஜக வெளியிட்டது காங்கிரஸ் தேர்தல் அறிக்கை? ராகுல் காந்தி
காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை பாஜக அப்படியே ஜெராக்ஸ் எடுத்து, அதில் சின்னத்தை மாற்றி, தங்கள் வாக்குறுதிகளாக வெளியிட்டுள்ளதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டினார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜுன்ஜு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பேசியதாவது, காங்கிரஸ் ஆறு மாதங்களுக்கு முன்னதாகவே தேர்தலுக்கான பல வேலைகளை ஆரம்பித்துவிட்டது. தேர்தல் அறிக்கையை தயார் செய்வதற்கு முன்னர், நாங்கள் ஏழை மக்கள், விவசாயிகள், …
மேலும் படிக்கமோடியை துண்டு துண்டாக வெட்டுவேன்: இம்ரான் மசூத், காங்கிரஸ் வேட்பாளர்
வரும் நாடாளுமன்ற தேர்தலில் உ.பி மாநிலத்தில் உள்ள சஹாரன்பூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடும் இம்ரான் மசூத், பா.ஜனதா பிரதமர் வேட்பாளர் மோடியை துண்டு துண்டாக வெட்டிக் கொல்வேன் என்று தெரிவித்துள்ளார். ஒரு கூட்டத்தில் அவர் பேசிய போது, நான் தெருவில் உள்ளவன், என் மக்களுக்காக நான் எனது உயிரையும் கொடுப்பேன். நான் சாவைக் கண்டு என்றும் பயந்ததில்லை. மோடி இந்த மாநிலத்தை குஜராத்தாக கருதுகிறார். குஜராத்தில் 4 சதவிகித …
மேலும் படிக்ககாங்கிரஸ் தேர்தல் அறிக்கை.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை இன்று புது தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா, பிரதமர் மன்மோகன் சிங், துணைத்தலைவர் ராகுல் ஆகியோர் வெளியிட்டனர். தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள் * 8 சதவீத பொருளாதார வளர்ச்சியை 3 வருடங்களில் எட்ட சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் வீடு அடிப்படை உரிமையாக்கப்படும் * இந்தியர்கள் அனைவருக்கும் மருத்துவ வசதி கிடைக்க நாடாளுமன்றத்தில் சட்டம் * தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் இட …
மேலும் படிக்கசமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி,காங்கிரஸ் தொண்டர்களுக்கு பயிற்சி
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ள செய்தியில், சமுக வலைதளங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்வது எப்படி என்பதற்கான பயிற்சி திருச்சியில் நேற்று (23.03.2014) நடைபெற்றதாக அறிவித்துள்ளது. இதில் திருச்சி மற்றும் கோயம்புத்தூர் மண்டலங்களைச் சேர்ந்த 26 மாவட்டங்களில் இருந்து காங்கிரஸ் இளைஞர்கள், மாணவர்கள் கலந்து கொண்டு சமூகவலைத்தளங்களைப் பயன்படுத்துவது பற்றி பயிற்சி எடுத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் படிக்க