முல்லைப் பெரியாறு அணையின் நீர் தேக்கும் அளவை 136 அடிக்கு குறைக்க வேண்டும் என்ற கேரளத்தின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நியமித்த மூவர் குழு நிராகரித்தது. முல்லைப் பெரியாறு அணையில், மூவர் கண்காணிப்புக் குழுவினர் திங்கள்கிழமை காலை ஆய்வு நடத்தினர். மாலையில், மூவர் குழுவின் ஆலோசனைக் கூட்டம் குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில், “தமிழக பொதுப் பணித் துறையின் செயல்பாடுகள் சரியில்லை. கதவணைகளில் (ஷட்டர்) பிரச்னை …
மேலும் படிக்கதமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக்குமார் நியமனம்
தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு தலைமை இயக்குநராக (டி.ஜி.பி.) அசோக் குமாரை நியமனம் செய்து தமிழக அரசு திங்கள்கிழமை உத்தரவிட்டது. பதவி நீட்டிப்பில் டி.ஜி.பி.யாக இருந்து செவ்வாய்க்கிழமையுடன் பணி நிறைவடையும் கே.ராமானுஜத்தை மாநில அரசின் ஆலோசகராக நியமித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்த விவரம்: தமிழகக் காவல் துறையின் சட்டம், ஒழுங்கு டி.ஜி.பி.யாக கடந்த 3 ஆண்டுகளாக இருந்த கே.ராமானுஜம் செவ்வாய்க்கிழமை(நவ.4) ஓய்வு பெறுகிறார். இதையொட்டி, அந்தப் பணியிடத்துக்கு …
மேலும் படிக்கதமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா நியமனம்
தமிழகத்தின் புதிய தலைமைத் தேர்தல் அதிகாரியாக, சந்தீப் சக்சேனா நியமிக்கப்பட்டுள்ளார். அவர், இப்போது வேளாண்மைத் துறைச் செயலாளராக உள்ளார். தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி பதவியில் இருந்து தன்னை விடுவிக்க வேண்டுமென பிரவீண்குமார் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர் அந்தப் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். சந்தீப் சக்சேனா 1989-ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ். பிரிவைச் சேர்ந்தவர். அவரது சொந்த ஊர் மத்தியப் பிரதேச மாநிலம், போபால். பல்வேறு இடங்களில் பல பொறுப்புகளை …
மேலும் படிக்கதமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது
தமிழகத்தில் உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடக்கிறது. தமிழகம் முழுவதும் 300-க்கும் அதிகமான பகுதிகள் பதற்றமானவை என கண்டறியப்பட்டுள்ளன. அந்தப் பகுதிகளில் வாக்குப்பதிவை வீடியோ மூலம் பதிவு செய்ய உத்தர விடப்பட்டுள்ளது. தேர்தல் நடக்கும் அனைத்து இடங்களிலும் துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். வாக்குப்பதிவு முடிந்தவுடன் மின்னணு இயந்திரங்கள், வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பலத்த பாதுகாப்புடன் …
மேலும் படிக்க