Tag Archives: பக்தி

திருப்போரூர் முருகன் கோயிலில் கிருத்திகை வழிபாடு

திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை விரத வழிபாட்டையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், பூஜைகள் நடைபெற்றன. திருப்போரூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையொட்டி, 2012-இல் பாலாலயம் செய்யப்பட்டு சன்னிதிகள் மூடப்பட்டு உற்சவருக்கு மட்டும் அபிஷேக ஆராதனைகள், பூஜைகள் நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில் கோயிலில் ராஜகோபுரம் உள்ளிட்ட பகுதிகளில் திருப்பணிகள் முடிவுற்ற நிலையில் கோயில் கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதனையடுத்து கும்பாபிஷேகம் நடந்து முதல்முறையாக ஞாயிற்றுக்கிழமை கிருத்திகை …

மேலும் படிக்க

திருச்செந்தூர் முருகன் கோவிலில்இன்று தேரோட்டம்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஆக.25) நடைபெறுகிறது. திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று ஆவணித் திருவிழா கடந்த 16-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கடந்த வெள்ளிக்கிழமை, சுவாமி தங்கச் சப்பரத்தில் சிவப்பு சாத்தி வீதி உலாவும், சனிக்கிழமை காலையில் வெள்ளை சாத்தியும், பகலில் பச்சைக் கடைசல் சப்பரத்தில் பச்சை சாத்தியும் சுவாமிகள் எழுந்தருளினர். தொடர்ந்து, சுவாமி குமரவிடங்கப்பெருமான், சுவாமி அலைவாயுகந்த …

மேலும் படிக்க

வரம் தரும் வரலட்சுமி நோன்பு!

வரலட்சுமி நோன்பு– திருமணமான பெண்கள் மாங்கல்ய பலம் வேண்டியும், கன்னிப்பெண்கள், விரைவில் திருமணம் நடைபெற வேண்டியும், நல்ல கணவன் கிடைக்க வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிப்பார்கள். இந்த வரலட்சுமி விரதம் இந்த ஆண்டு ஆடி மாதம் பவுர்ணமிக்கு முன்பாக வரும் வெள்ளிக்கிழமை அன்று வருகிறது. அன்றைய தினத்தில் இந்த விரதத்தை பெண்கள் அனைவரும் அனுஷ்டிப்பது சிறப்பான பலன்களைத் தந்தருளும். இந்த வரலட்சுமி நோன்பு தினத்தில்தான், பாற்கடலில் இருந்து மாலை வேளையில் …

மேலும் படிக்க

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நாளை வைகாசி விசாக திருவிழா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நாளை புதன்கிழமை விமரிசையாக கொண்டாடப்படுகிறது. வைகாசி விசாகம் என்பது முருகப்பெருமான் அவதரித்த திருநாள். எனவே அன்றைய தினம் அவரை வழிபட்டால் வருடம் முழுவதும் வழிபட்ட பலன் கிடைக்கும். வைகாசி விசாக திருவிழா அனைத்து முருகன் கோயில்களிலும் சிறப்பாக கொண்டாடப்படும் என்றாலும், அறுபடை வீடுகளளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வெகு விமரிசையாக இந்த விழா கொண்டாடப்படும். விழாவையொட்டி …

மேலும் படிக்க

திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோயில் தங்கப்புதையல் திருடப்படுகிறதா?

கேரள மாநில திருவனந்தபுரத்தில் உள்ள ஸ்ரீபத்மநாபசுவாமி கோயிலின் சொத்து மதிப்புகள் குறித்து விசாரணை செய்ய இந்திய உச்சநீதிமன்றம் நியமித்த முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் கோபால் சுப்ரமனியம் தலைமையிலான குழு தனது விசாரணையை முடித்து அந்த 577 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளது. திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாபசுவாமி கோவிலில் உள்ள ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க நகைகள் உள்ளிட்ட பொக்கிஷங்கள் இருப்பது கடந்த 2011ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டதை …

மேலும் படிக்க

சிங்காரத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா

சிங்காரத்தோட்டம் டெக்ஸ்டைல்ஸ் & கார்மெண்ட்ஸ் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. 26-03-2014 அன்று நடைபெற்ற எழுத்துப் போட்டியில் 300 பேர் கலந்து கொண்டனர். அம்மன் திருவாசகத்தை 10 நிமிடத்துக்குள் எழுதிய முதல் மூன்று பேருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. 27-03-2014 அன்று நூற்றுக்கும் மேற்பட்ட தாய்மார்கள் கலந்து கொண்ட கல்யாண சீர்வரிசை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஸ்ரீ முத்துமாரியம்மன் திருக்கோயிலை ஒட்டிய வீதிகளில் அம்மன் சீர்வரிசையினை ஊர்வலமாக எடுத்துச் …

மேலும் படிக்க