Tag Archives: ஆசிய விளையாட்டு போட்டிகள்

டெண்டுல்கர் புகார், கிரேக் சேப்பல் மறுப்பு

ராகுல் திராவிடுக்கு பதிலாகத் தன்னை கேப்டனாக இருக்குமாறு 2007 உலகக் கோப்பை போட்டிக்கு முன் அப்போதைய பயிற்சியாளர் கிரேக் சேப்பல் கேட்டுக் கொண்டார் என்று டெண்டுல்கர் தெரிவித்த கருத்துக்கு சேப்பல் மறுப்பு தெரிவித்துள்ளார். “பிளேயிங் இட் மை வே’ என்ற சச்சின் டெண்டுல்கரின் சுயசரிதைப் புத்தகம் வியாழக்கிழமை வெளியாக உள்ளது. 2005 முதல் 2007 வரை இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்பட்ட ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரேக் சேப்பல் குறித்து அதில் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டி : தங்கம் வென்றார் மேரி கோம்

ஆசிய விளையாட்டு மகளிருக்கான குத்துச் சண்டைப் போட்டியில் இந்திய வீராங்கனை மேரி கோம் தங்கம் வென்றார். 51 கிலோ எடைப்பிரிவில் மேரிகோம் தங்கம் வென்றுள்ளார். ஆசிய விளையாட்டுப் போட்டியில் மேரி கோம் தங்கம் வெல்வது இதுவே முதல் முறையாகும். 5 முறை உலக சாம்பியனான மேரி கோம், கஜகஸ்தான் வீராங்கனை ஜாய்னா ஷெகெர்பெகோவா என்பவரை 2-0 என்று வெற்றி பெற்றார்.

மேலும் படிக்க

டென்னிஸ் மற்றும் வட்டு எறிதலில் இந்தியாவுக்கு தங்கம்

தென் கொரியாவின் இன்சியானில் நடைபெற்று வரும் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் 10-வது நாளில், இந்தியாவுக்கு 7 பதக்கங்கள் கிடைத்தன. டென்னிஸ் ஆட்டத்தின் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்ஸா – சாகேத் மைனேனி ஜோடி தங்கப் பதக்கத்தை வென்றது. மகளிருக்கான வட்டு எறிதலில் சீமா புணியா முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். மேலும் மகளிருக்கான 1500 மீட்டர் ஓட்டத்தில் ஜெய்ஷா, மகளிருக்கான 3000 மீட்டர் ஸ்டீபிள்சேஸ் பிரிவில் நவீன் …

மேலும் படிக்க

வில்வித்தை மற்றும் ஸ்குவாஷில் இந்தியா தங்கம் வென்றது

இன்சியானில் நடைபெறும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வில்வித்தை போட்டியில் தங்கம் வென்று சாதனைப் படைத்துள்ளது இந்தியா. இன்று நடந்த காம்பவுண்டு பிரிவு பைனலில், இந்திய ஆண்கள் அணி வலிமையான தென் கொரியாவை 227-225 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியுள்ளது. இந்தியா சார்பில் சந்தீப் குமார், அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான் அடங்கிய அணி பங்கேற்றது. தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த இந்திய அணி, முடிவில் 227-225 என்ற புள்ளிக்கணக்கில் தென் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டி: ஸ்குவாஷில் வெள்ளி பதக்கம் வென்றார் இந்திய வீரர் சவுரவ் கோஷல்

ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டியில், ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சவுரவ் கோஷல் வெள்ளிப் பதக்கம் வென்றார். தென் கொரியாவின் இன்சியான் நகரில் 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டி நடைபெற்று வருகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற, ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவு அரையிறுதிப் போட்டியில் இந்தியாவின் சவுரவ் கோஷல் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். அரையிறுதியில் வென்றதன் மூலம் ஸ்குவாஷ் ஆடவர் ஒற்றையர் பிரிவில் இந்தியாவுக்கு வெள்ளிப் …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டுப் போட்டி: வெண்கலம் வென்றார் அபினவ் பிந்த்ரா

ஆசிய விளையாட்டு போட்டியில் இன்று தனது தொழில்முறை துப்பாக்கி சுடுதல் போட்டியை நிறைவு செய்த அபினவ் பிந்த்ரா இந்தியாவுக்கு வெண்கலம் பதக்கம் பெற்று தந்துள்ளார். தென்கொரியாவின் இன்சியானில் நடந்து வரும் ஆசிய விளையாட்டு போட்டியில் துப்பாக்கி சுடும் போட்டியின் 4-வது நாளில் 10 மீட்டர் ஆண்கள் பிரிவில், அபினவ் பிந்த்ரா தலைமையிலான சஞ்சீவ் ராஜ்புட், ரவிகுமார் ஆகியோர் கொண்ட அணி இந்தியாவுக்கு 6- ஆவது வெண்கல பதக்கம் பெற்று தந்து …

மேலும் படிக்க

ஆசிய விளையாட்டு போட்டிகள் இன்று தொடக்கம்: கண்கவர் கலை நிகழ்ச்சிகள் வீடியோ

தென் கொரியாவின் இன்சியானில் வெள்ளிக்கிழமை 17-வது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தொடங்கவுள்ளன. முதல் நாளான வெள்ளிக்கிழமை இரவு தொடக்க விழா நடைபெறவுள்ளது. கிளாஸ்கோவில் கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டிகளில் வென்ற பதக்கங்களை (64) விட, இதில் இந்திய வீரர், வீராங்கனைகள் அதிக பதக்கங்களை வென்று தருவர் என எதிர்பார்க்கப்படுகிறது. உண்மையில் காமன்வெல்த்தை விட ஆசியப் போட்டிகளில் பதக்கம் வெல்வது என்பது அவ்வளவு எளிதல்ல. சீனா, தென் கொரியா, …

மேலும் படிக்க