ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமராக முன்னாள் தகவல் தொடர்பு துறைஅமைச்சராக இருந்த மால்கம் டர்ன்புல் இன்று செவ்வாய்க்கிழமை பதவியேற்றார். ஆஸ்திரேலிய தலைநகர் கன்பராவில் இன்று நடந்த பதவியேற்பு விழாவின் போது கவர்னர்-ஜெனரல் பீட்டர் காஸ்க்ரொவ் மால்கம் டர்ன்புல்லுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றுக் கொண்ட பின் பேசிய டர்ன்புல் வலிமையான நாட்டை உருவாக்க கூட்டாக சேர்ந்து கடுமையாக உழைக்க வேண்டும் என கூறினார்.
மேலும் படிக்ககுயின்ஸ்லாந்து பல்கலையில் பிரதமர் நரேந்திர மோடி
ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஜி 20 மாநாட்டில் பங்கேற்க சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டில் உள்ள குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்துச் சென்றார். பிரிஸ்பேன் விமான நிலையத்தை அடைந்த மோடி, ஒரு சில மணி நேரங்களில் குயின்ஸ்லாந்து பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பல்கலைக்கழகத்தில் அறிவியல் விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்புகளை நேரில் பார்த்தும், அவற்றின் பயன்பாடு குறித்து விஞ்ஞானிகளிடம் கேட்டறிந்தார் மோடி. தேவையற்ற கழிவுகளை வேளாண்மைக்கு பயன்படுத்துவது எவ்வாறு என்பது குறித்தும், …
மேலும் படிக்கஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க்கின் பீல்டிங் அமைப்பினால் சர்ச்சை
அபுதாபியில் நடைபெறும் பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா கேப்டன் அமைத்த களவியூகம் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. விக்கெட்டுகளை எடுக்க முடியாமல் ஆஸ்திரேலியா பந்து வீச்சாளர்கள் திணறினர். இதனையடுத்து சர்ச்சைக்குரிய சில களவியூகங்களை ஆஸ்திரேலியா கேப்டன் மைக்கேல் கிளார்க் அமைத்தார். இன்று ஒரு சமயத்தில் மிட்செல் ஜான்சனை அழைத்து நேராக, அதாவது பந்து வீசும் பவுலருக்கு நேராக நிற்க வைத்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், பேட்ஸ்மென்களுக்கு பவுலரின் கை …
மேலும் படிக்க