இந்தியன் ரெயில்வேயில் அதிவேக ரெயில்கள் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கு முன்னோட்டமாக டெல்லி–ஆக்ரா இடையே அதிவேக ‘செமி புல்லட்’ ரெயில் சோதனை நேற்று நடந்தது. இதற்காக 5,400 குதிரை சக்தி திறன் கொண்ட என்ஜின் பொருத்தப்பட்ட ரெயில் 10 பெட்டிகளுடன் புறப்பட்டது. இதில் 2 ஜெனரேட்டர்களும் பொருத்தப்பட்டு இருந்தது. இந்த ரெயில் மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் சீறிப் பாய்ந்தது. டெல்லி ரெயில் நிலையத்தில் காலை 11.15 மணிக்கு புறப்பட்ட …
மேலும் படிக்கபிஹாரில் ராஜ்தானி ரயில் தடம் புரண்டு விபத்து: 4 பேர் பலி, 11 பேர் காயம்
தில்லியில் இருந்து திப்ருகர் செல்லும் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை 2 மணி அளவில் பீகார் மாநிலம் கோல்டன்கார்க் அருகே திடீரெனெ தடம் புரண்டது.எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த விபத்தினால் 4 பேர் பலியாகினர். 11 பேர் காயமடைந்துள்ளனர். டெல்லி- திப்ருகர் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் ரயில் டெல்லியில் இருந்து நேற்று (செவ்வாய்கிழமை) புறப்பட்டது. பிஹார் மாநிலம் சாப்ரா ரயில் நிலையத்திற்கு அதிகாலை 2 மணி அளவில் வந்தடைந்தது. சாப்ரா ரயில் நிலையத்தில் …
மேலும் படிக்க80 கி மீ தூரம் வரை, புறநகர் ரயில் இரண்டாம் வகுப்பு கட்டண உயர்வு வாபஸ்
80 கி.மீ., தொலைவு வரையிலான புறநகர் ரயில் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, வாபஸ் பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இன்று ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 80 கி.மீ. தொலைவு வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர், புறநகர் அல்லாத அனைத்து ரயில்களுக்கும் 14.2 சதவீத கட்டண உயர்வை ரயில்வே அறிவித்திருந்தது. …
மேலும் படிக்கரெயிலில் காத்திருப்போர் பட்டியலுக்கு சீட் கிடைத்தால் SMS வரும்
ரெயில் பயணத்திற்கு டிக்கெட் ரிசர்வ் செய்தவர்கள் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால், இனி ரெயில்வே துறை தொலைபேசி எண் 139 மற்றும் அதன் வலைதளத்திலேயோ சென்று அவர்களுக்கு பெர்த் கிடைத்துள்ளதா என அறிந்துகொள்ள வேண்டியதில்லை. காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்களின் டிக்கெட்டிற்கு சீட் கிடைத்தால் இனி ரெயில்வே துறை சார்பில் எஸ்.எம்.எஸ் அனுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 10 நாட்களாக இதற்கான சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், இன்று முதல் இந்த …
மேலும் படிக்க