தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன்கள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இது அடித்தட்டு மற்றும் விவசாய மக்களுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறை அமைச்சகத்தின் கீழ் மாவட்ட கூட்டுறவு வங்கிகள், மத்திய கூட்டுறவு வங்கிகள், வேளாண் கூட்டுறவு வங்கிகள் உட்பட பல்வேறு கூட்டுறவு வங்கிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த வங்கிகள் அனைத்தும் தமிழ்நாடு கூட்டுறவுத் துறையின் கீழ் அந்தத் துறையின் பதிவாளர் மேற்பார்வையில் நிர்வாகிக்கப்படுகிறது. …
மேலும் படிக்கபுதிதாக 10,000 சுய உதவிக் குழுக்கள், 6,000 கோடி கடன்: சட்ட சபையில் முதல்வர்
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா இன்று அறிக்கை ஒன்றை படித்தார். அதில் அவர் கூறியதாவது: ”சுய உதவிக் குழுக்கள் தங்களது வாழ்வாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பெரும்பாலும் வங்கிக் கடனையே சார்ந்துள்ளன. மேலும், சுய உதவிக் குழுக்களுக்கு நுகர்வு அல்லது பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி தேவைப்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதார தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் 700 ஊராட்சி …
மேலும் படிக்ககுறுகியக் காலக் கடன்(ரெப்போ)க்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை : RBI
ரிசர்வ் வங்கியால் பிற வங்கிகளுக்கு அளிக்கப்படும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மும்பையில் இன்று ரிசர்வ் வங்கி(RBI) ஆளுநர் ரகுராம் ராஜன் தலைமையில் நடைபெற்ற ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை ஆய்வுக் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி அளிக்கும் குறுகிய காலக் கடன்களுக்கான வட்டி (ரெப்போ) விகிதத்தில் மாற்றமில்லை என்றும், அது தற்போதிருக்கும் 8% ஆகவே நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. …
மேலும் படிக்க