மதுரையில் நடைபெற்ற கிரானைட் முறைகேடுகள் பற்றி மட்டும் விசாரிக்கலாம் என்று ஐஏஎஸ் அதிகாரி சகாயத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து தீர்ப்பளித்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கவுல், மதுரை கிரானைட் முறைகேடு பற்றி மட்டும் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யலாம் என்றும், விவகாரம் பெரிய அளவிலானது என்பதால், விசாரணையை படிப்படியாக நடத்தலாம் என்றும் கூறினார். கிரானைட் முறைகேடு குறித்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்ற உத்தவுக்கு …
மேலும் படிக்ககனிமவள முறைகேடுகளில் தமிழக அரசு சிலரை காப்பாற்ற முயல்கிறதா?
தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ள கனிமவள முறைகேடுகள் குறித்து ஆராய்வதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு முரணாக தமிழக அரசு புதிய உத்தரவை பிறப்பித்திருப்பதன் மூலம் நீதிமன்ற உத்தரவை அவமதித்திருப்பதாக சகாயம் ஆய்வுக் குழு ஆதரவு இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது. தமிழக அரசின் இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்போவதாகவும் அந்த அமைப்பு அறிவித்துள்ளது. …
மேலும் படிக்கசகாயம் ஆணையத்துக்கு தாமதம் ஏன்? கருணாநிதி கேள்வி
நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னரும் கூட சகாயம் ஆணையத்துக்கு அனுமதி அளிக்க தாமதம் செய்யப்பட்டது ஏன்? என தமிழக முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கைக்கு பதில் அளிக்கும் வகையில் திமுக தலைவர் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், “கிரானைட் முறைகேட்டை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தது ஜெயலலிதா அரசு தான்” என்று தலைப்பிட்டிருக்கின்றன. உண்மை தான்; முறைகேடு நடக்கும் போது தானே, வெளிச்சத்துக்கு வர முடியும்? அந்த …
மேலும் படிக்க