Tag Archives: தென்கொரியா

தென் கொரியா – வட கொரியா போர் மூலும் சூழல்: அதிகாரிகள் பேச்சுவார்த்தை

கொரிய நாடுகளின் எல்லையில் நீடிக்கும் போர் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு நாடுகளுக்கும் இடையில், ராணுவத்தினர் இல்லாத ஒரு இடத்தில் இந்தப் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. தென் கொரியா தனது எல்லையில் ஒலிபெருக்கிகளை வைத்து கம்யூனிஸத்திற்கு எதிரான பிரச்சாரம் செய்வதை நிறுத்துவதற்கு வட கொரியா காலக்கெடு விதித்திருந்தது. அந்தக் காலக்கெடு துவங்குவதற்கு முன்பாகவே இந்தப் பேச்சுவார்த்தைகள் துவங்கியிருக்கின்றன. தென்கொரிய அரசு, காலக்கெடுவுக்குள் பிரச்சாரத்தை நிறுத்தவில்லையென்றால் தாக்குதல் …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து பலி எண்ணிக்கை 157 ஆக உயர்வு

தென் கொரியாவில் ஏப்ரல் 15-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) நிகழ்ந்த படகு விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 157 ஆக அதிகரித்துள்ளது. தென் கொரியாவின் சியோல் அருகே உள்ள இன்சியோன் துறைமுகத்திலிருந்து 450க்கும் மேற்பட்ட பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் திடீரென மூழ்கியது. அவசர உதவி கோரி கப்பலில் இருந்து வெளியான சமிக்ஞையை பார்த்து மீட்புக்குழுவினர் விரைந்தனர். அதற்குள் கப்பல் பாதியளவு மூழ்கிவிட்டது. கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் மீட்பு பணியில் இதுவரை …

மேலும் படிக்க

தென்கொரிய கப்பல் விபத்து – 300 பேரை காணவில்லை தேடும் பணி தீவிரம்

தென் கொரியக் கப்பல் முழ்கிய விபத்தில் இன்னும் மீட்கப்படாமல் இருக்கும் சுமார் 300 பேரைத் தேடும் முயற்சிகள் தொடர்கின்றன. இதில் பெரும்பாலானோர் மாணவர்கள். கப்பலில் சென்ற சுமார் 470 பேரில் இதுவரை 179 பேர் மீட்கப்பட்டுள்ளனர். இரவு முழுவதும், தேடும் விளக்குகளைப் பயன்படுத்தி அவசரச் சேவைப் பணியாளர்கள் தேடினர். ஆனாலும், கடலில் சுழல் நீரோட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள், கப்பலுக்குள் நுழைய முயன்ற முயற்சிகள் பாதிக்கப்பட்டன. இது வரை குறைந்தது …

மேலும் படிக்க