Tag Archives: பாராளுமன்ற தேர்தல்

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக விடுமுறை தரவேண்டும் – தொழிலாளர் நல ஆணையம்

நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தங்களுடைய தொழிலாளர்களுக்கு 24.04.2014 அன்று கட்டாயமாக ஊதியத்துடன் விடுமுறை அளிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இது பற்றி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்: தமிழ்நாட்டில் பாராளுமன்ற பொதுத் தேர்தல் மற்றும் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் 24.04.2014 அன்று நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 1951ம் வருட மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 135B ன் அடிப்படையில் தேர்தல் ஆணையம் அளித்துள்ள அறிவுரைகளின்படி …

மேலும் படிக்க

எவ்வளவு நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது – விஜயகாந்த்

முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான். எனவே கண்டிப்பாக அவரை எதிர்த்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபடுவேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார். பாஜக கூட்டணியில் இணைந்த பிறகு நேற்று செய்தியார்களிடம் பேசினார் விஜயகாந்த். அப்போது பாஜக கூட்டணியில் இணைந்தது தொடர்பாகவும், அதிமுகவுக்கு எதிரான பிரசாரம் தொடர்பாகவும் அவர் பேசினார். அப்போது முதல்வர் ஜெயலலிதாவால் அதிகம் பாதிக்கப்பட்டவன் நான்தான். எனவே கண்டிப்பாக அவருக்கு எதிராக பிரசாரம் செய்வேன் என்று வேகமாக …

மேலும் படிக்க

தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப் பயணம் செய்து வரும் முதலமைச்சர் ஜெயலலிதா, சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், சிதம்பரம் பைபாஸ் சாலையில், அ.இ.அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நாளை பிரச்சாரம்

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா, சிதம்பரம் தொகுதியில் போட்டியிடும் கழக வேட்பாளருக்கு நாளை ஆதரவு திரட்டுகிறார். இதற்காக வருகை தரும் முதலமைச்சருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க, கழகத் தொண்டர்களும் பொதுமக்களும் முழுவீச்சில் தயாராகி வருகின்றனர். நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில், அமைதி, வளம், வளர்ச்சி என்ற தாரக மந்திரத்துடனும், நாற்பதும் நமதே என்ற வெற்றி முழக்கத்துடனும், அ.இ.அ.தி.மு.க. பொதுச் …

மேலும் படிக்க

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமா? உங்களுக்கும் ஒரு வாய்ப்பு

2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி. நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை …

மேலும் படிக்க