குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி 4 நாள் சுற்றுப் பயணமாக வியட்நாம் சென்றுள்ளார். இன்று அங்கு அவர் வியட்நாம் பிரதமர், துணைப் பிரதமர், வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் ஆளும் கம்யூஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஆகியோர்களை சந்திக்கிறார். எண்ணெய் துறையில் இரு நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என தெரிகிறது. மேலும் அவர் அங்குள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை பார்வையிட உள்ளார்.
மேலும் படிக்கஅனைத்து குடிமக்களின் உரிமையையும் புதிய அரசு பாதுகாக்கும் – குடியரசுத் தலைவர் உரை
நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டம் இன்று காலை துவங்கியது. இதில் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உரையாற்றினார். அப்போது, புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசுக்கு பிரணாப் முகர்ஜி தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். மக்களவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ள சுமித்ரா மகாஜனுக்கும் குடியரசுத் தலைவர் வாழ்த்து தெரிவித்தார். மேலும், நாடாளுமன்றக் கூட்டுக் கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, நடந்து முடிந்துள்ள தேர்தல் ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையை உறுதி செய்கிறது. நிலையான அரசு அமைய …
மேலும் படிக்க