நாராயண சாமி உள்ளிட்ட 30 பேருக்கு வழங்கப்பட்ட விஜபி பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக்கொண்டுள்ளது. இந்த பட்டியலில் முன்னாள் மத்திய அமைச்சர் சுசில் குமார் ஷிண்டே, முன்னாள் மக்களவை சபாநாயகர் மீராகுமார், உள்ளிட்டோரும் அடங்குவர். அந்த விஜபிகளுக்கு முன்பிருந்த அச்சுறுத்தல் தற்போதும் நீடிக்கிறதா என்பதை ஆய்வு செய்ததின் அடிப்படையில் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் படிக்கஇந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி
இந்தியாவின் மக்கள் தொகை 121.09 கோடி ஆகும். இதில் இந்துக்கள் 96.63 கோடி( 79.8 %), முஸ்லீம்கள் 17.22 கோடி ( 14.2 %), கிறித்தவர்கள் 2.3 கோடி (2.78 %), சீக்கியர்கள் 2.08 கோடி, ஜென மதத்தினர் – 45 லட்சம், பவுத்தவர்கள் – 84 லட்சம் ஆகும். இந்த புள்ளி விபரங்களை மத்திய அரசு அறிவித்து உள்ளது.
மேலும் படிக்கசிகரெட் விற்பனையை கட்டுப்படுத்த மத்திய அரசு பரிசீலனை: பாக்கெட்டாக மட்டுமே இனி விற்க வேண்டும்
இளம் வயதினரை பாதிப்புக்குள்ளாக்கும் சிகரெட் விற்பனையைக் கட்டுப்படுத்தும் வகையில், பாக்கெட்டாக மட்டுமே கடைகளில் இனி சிகரெட் விற்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டை கொண்டுவருவது என மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. புகைப்பழக்கத்தால் ஏற்படும் பாதிப்பு குறித்து மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதில், “புகைப்பழக்கத்தைக் கட்டுப்படுத்துவது குறித்து சிகரெட் மற்றும் இதர புகையிலை பொருட்களின் விற்பனை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. …
மேலும் படிக்கசென்னை மோனோ ரயில் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்
சென்னை மோனோ ரயில் திட்டத்தின் முதல் கட்டத்தை செயல்படுத்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு கொள்கை அளவில் அனுமதி அளித்துள்ளது. இந்த முதல் கட்டத்தில் சென்னை பூந்தமல்லியிலிருந்து கத்திபாரா வரை இந்த மோனோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும். போரூரிலிருந்து வடபழனியை இணைக்கும் பாதையும் போடப்படும். முதல் கட்டத்தில் 20.68 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்திற்கு என 3,267 கோடி ரூபாய் செலவாகும் என …
மேலும் படிக்கமத்திய அமைச்சரவை நாளை மாற்றப்படுகிறது
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை நாளை விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதனிடையே, புதிதாக இடம்பெறும் அமைச்சர்கள் யார், யார் என்ற தகவல் வெளியாகியுள்ளன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த மே மாதம் 26–ந் தேதி பதவி ஏற்றது. இந்த அமைச்சரவையில் 23 கேபினட் அமைச்சர்களும், 22 ராஜாங்க அமைச்சர்களும் இடம்பெற்றுள்ளனர். இதில் சில அமைச்சர்கள் ஒன்றுக்கு மேற்பட்ட துறைகளை பொறுப்பேற்றுள்ளதால், புதிய அமைச்சர்களை நியமிக்க …
மேலும் படிக்கமத்திய அமைச்சரவை விரிவாக்கம்?
இந்தியாவில் பாரதிய ஜனதாக் கட்சி தலைமையிலான ஆட்சியமைந்து ஐந்து மாதங்கள் கடந்துள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தனது அமைச்சரவையை இந்த வார இறுதியில் மேலும் விரிவுபடுத்தவுள்ளதாக ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. கடந்த மே மாதம், 7 பெண்கள் அடங்கலாக 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களாக பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஆறுக்கும் மேற்பட்ட அமைச்சர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்கின்றனர். குறிப்பாக, அமைச்சர் அருண் ஜெட்லி முக்கிய இரண்டு பொறுப்புக்களான …
மேலும் படிக்கஆன்லைனில் தகவல் அறியும் உரிமைச் சட்டம்: உச்சநீதிமன்றம் கெடு
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மின்னணு தொழில் நுட்பத்தின் மூலம் கோரிக்கைகளைப் பெற்று, தகவல்களை அளிப்பது தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பரிசீலித்து 3 வாரங்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் ராஜீவ் அகர்வால், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், “தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில், பொதுமக்கள் எழுத்துபூர்வ மாகவும், மின்னணு தொழில் நுட்பங்கள் மூலமாகவும் தகவல் …
மேலும் படிக்கஆதார் வழங்க தமிழ்நாட்டில் 469 நிரந்தர மையங்கள்
தமிழகத்தில் ஆதார் அட்டை வழங்க 469 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்று மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்க இணை இயக்குனர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். மேலும் சென்னையில் ஆதார் அட்டை வழங்க 50 நிரந்தர மையங்கள் அமைக்கப்படும் என்றும் அவர் தகவல் தெரிவித்தார். வரும் நவம்பர் 11ம் தேதிக்குள் மாநகராட்சிகள், நகராட்சிகள், வட்ட தலைமையகங்களில் ஆதார் மையம் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிரந்தர மையங்கள் அரசு அலுவல் நாட்களில் காலை …
மேலும் படிக்ககருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் 8 பேர் பட்டியல்
வெளிநாட்டு வங்கிகளில் கருப்புப் பணம் பதுக்கி வைத்திருக்கும் மேலும் 8 இந்தியர்களின் பெயர்ப் பட்டியலை உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில், மத்திய அரசு திங்கள்கிழமை தாக்கல் செய்த 10 பக்க பிரமாணப் பத்திரத்தில், வெளிநாட்டு வங்கிகளில், டாபர் இந்தியா’வின் நிறுவனர்களில் ஒருவரான பிரதீப் பர்மன், குஜராத் மாநிலம் ராஜ்கோட்டைச் சேர்ந்த பங்குத் தரகர் பங்கஜ் சிமன்லால் லோடியா, கோவாவைச் சேர்ந்த டிம்ப்லோ …
மேலும் படிக்கஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிடுவதை அனுமதிக்க முடியாது : சந்திரசேகரராவுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் எச்சரிக்கை
ஊடகங்களின் சுதந்திரத்தில் தலையிட யாரையும் அனுமதிக்க முடியாது என்று மத்திய தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் செய்தியாளர்களிடம் கூறினார். தெலங்கானா குறித்து அவதூறு பரப்பும் ஊடக செய்தியாளர்களை 10 அடி ஆழத்தில் புதைத்து விடுவோம் என்று எச்சரிக்கை விடுத்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவேத்கர் இவ்வாறு கருத்துக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க