இந்தியாவில் தீவிரவாதம் மற்றும் தேசத்துக்கு எதிராக போர் புரிந்ததாக குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களைத் தவிர மற்ற அனைவருக்கும் மரண தண்டனை அளிக்கப்படுவது ஒழிக்கப்பட வேண்டும் என சட்ட ஆணையம் பரிந்துரைத்துள்ளது. நீதிபதி ஏ.பி.ஷா தலைமையிலான ஆணையம் இந்திய மத்திய அரசிடம் திங்கட்கிழமை தமது பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை அளித்தது. தமது இந்தப் பரிந்துரைகள் சமூகத்தில் அறிவுபூர்வமான, கொள்கை ரீதியிலான விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று தாங்கள் நம்புவதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதன் …
மேலும் படிக்கபோக்கோ ஹராம் தீவிரவாதிகள் 10 பேருக்கு மரண தண்டனை
போக்கோ ஹராம் அமைப்பைச் சேர்ந்த 10 தீவிரவாதிகளுக்கு சாத் நீதிமன்றம் மரணதண்டனை விதித்துள்ளது. நைஜீரியா, நைஜர், சாத் உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் போக்கோ ஹராம் அமைப்பினர் கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக தீவிரவாத செயல்களில் ஈடுபட்டுவருகின்றனர். பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களை அவர்கள் கொலை செய்துள்ளனர். இந்நிலையில் சாத் நாட்டில் கைது செய்யப்பட்ட போக்கோ ஹராம் தீவிரவாதிகள் பத்து பேருக்கு ஜமினா நீதிமன்றம் மரணதண்டனை விதித்து உத்தரவிட்டது. இத்தீர்ப்பு பொதுமக்களிடையே வரவேற்பைப் …
மேலும் படிக்க