அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா மலேசியா சென்றுள்ளார். கடந்த 50 ஆண்டுகளில் பதவியிலுள்ள அமெரிக்க அதிபர் ஒருவர் மலேசியாவுக்கு சென்றுள்ளது இதுவே முதல் தடவை. பசிபிக் பிராந்திய வணிக ஒப்பந்தம் ஒன்றில் மலேசிய அரசாங்கத்தை கையொப்பம் இடுமாறு ஒபாமா வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மலேசியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் எல்லாக் காலங்களிலும் நல்லவிதமாக இருந்ததில்லை. அமெரிக்க கொள்கைகளை மலேசியப் பிரதமர்கள் பெரும்பாலும் கடுமையாக விமர்சித்து வந்துள்ளனர்.
மேலும் படிக்கசெயற்கைகோளில் தெரிந்த விமானத்தின் 122 உடைந்த பாகங்கள்: மலேசிய மந்திரி
காணாமல் போய் இந்தியப் பெருங்கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதாக அறிவிக்கப்பட்ட மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் MH370. ஆஸ்திரேலியாவின் பெர்த் துறைமுகத்தில் இருந்து 1588 மைல் தொலைவில், பிரெஞ்ச் செயற்கைகோள் படத்தில் விமானத்தின் உடைந்த பாகங்கள் என்று கருதப்படும் 122 பொருட்கள் கடலில் மிதப்பதாகவும் அவை விமானத்தின் உடைந்த பாகங்கள் தானா என்பது குறித்து ஆய்வு நடந்து வருவதாக மலேசியா போக்குவரத்து துறை அமைச்சர் ஹிஸ்கமுதின் உசைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதனிடையே மாயமான விமானத்தில் பயணம் …
மேலும் படிக்க