Tag Archives: வானிலை

சென்னையில் நேற்றிரவு கன மழை

சென்னையில் நேற்று இரவு இடியுடன் கூடிய கனமழை பெய்தது. சென்னையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்தது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகினர். இந்நிலையில், நேற்று இரவு திடீரென இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.

மேலும் படிக்க

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் தீவிரம் அடைந்துள்ளது. இந்தநிலையில் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்யும் என்றும், வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு …

மேலும் படிக்க

வரும் 27ந்தேதி வானில் நிலா இரத்தச் சிவப்பாக தெரியும் சூப்பர் மூன்: அதிசயம்

இம்மாதம் 27ம் தேதி வானில் தென்பட உள்ளது சூப்பர் மூன்.  இந்த முறை 14 மடங்கு பெரியதாகவும், 30 சதவீதம் மேலும் பிரகாசமாகவும் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அன்று தான் முழு சந்திர கிரகணமும் நிகழ்ப்போகிறது. இதனால் சூரிய ஒளி பூமியின் காற்று மண்டலத்தில் பட்டு சிதறுவதால் நிலவானது ஆரஞ்சு நிறத்திலிருந்து இரத்த சிவப்பு வரையிலான நிறங்களில் தெரியும் என்றும் விஞ்ஞானிகள் …

மேலும் படிக்க

தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு அனேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வானிலை ஆய்வு மையஉதவி இயக்குநர் ராஜேந்திரன் சென்னையில் தகவல் தெரிவித்துள்ளார். இலங்கை அருகே வளிமண்டல மேலடுக்கில் ஏற்பட்டுள்ள சுழற்சி சற்றே நகர்ந்துள்ளது. எனவே அடுத்த மூன்று நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேலும் படிக்க

அரபிக்கடலில் நானவு புயல்: அடுத்த 24 மணி நேரத்தில் தீவிரமடையும்

கிழக்கு மத்திய அரபிக் கடலில் நேற்று உருவான காற்றழுத்தத் தாழ்வு நிலை வடக்கு, வட மேற்காக நகர்ந்து தீவிர காற்றழுத்தத் தாழ்வு நிலையாக மாறி, புயல் சின்னமாக உருவெடுத்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நானவுக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் சின்னம் மும்பைக்கு 670 கிலோ மீட்டர் தொலைவில் மேற்கு தென்மேற்கு திசையில் மையம் கொண்டுள்ளதாகவும், அடுத்த 24 மணி நேரத்தில் இது தீவிரமான புயலாக மாறக்கூடும் …

மேலும் படிக்க