ஆந்திராவின் ராவலுபடு பகுதியில் வெங்காயம் ஏற்றி வந்த லாரி கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசாவில் இருந்து வெங்காயம் ஏற்றிக்கொண்டு ஆந்திராவை நோக்கி லாரி ஒன்று வந்தது. ராவலுபடு என்ற இடத்தில் லாரியை நிறுத்திவிட்டு ஓட்டுநர் சிறிது நேரம் ஓய்வு எடுக்கச் சாலையோரம் தூங்கியுள்ளார். அங்கு வந்த மர்ம நபர்கள் வெங்காயத்துடன் நிறுத்தப்பட்டிருந்த லாரியை கடத்திச் சென்றுள்ளனர். சிறிது நேரம் கழித்து கண் விழித்த ஓட்டுநர் லாரி இல்லாததைக் கண்டு …
மேலும் படிக்கரக்சா பந்தனுக்கு பரிசு வெங்காயம்!
வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையாக அதிகரித்துள்ள நிலையில் அத்யாவசிய பொருட்களின் விலையை கட்டுக்குள் கொண்டுவராத மத்திய அரசைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு விதங்களில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் காங்கிரஸ் கட்சியினர் ரக்சா பந்தன் பண்டிகையை முன்னிட்டு வெங்காயத்தை பொதுமக்களுக்கு பரிசளித்து அத்யாவசி பொருட்களின் விலை உயர்வுக்கு நூதன முறையில் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மேலும் படிக்கவெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும்: டாக்டர் ராமதாஸ்
வெங்காயத்தை உரித்தால் தான் கண்களில் தண்ணீர் வரும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வரும் அளவுக்கு அதன் விலை விண்ணைத் தொட்டிருக்கிறது. என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி …
மேலும் படிக்க