தமிழ்நாடு யூனியன் ஆஃப் ஜர்னலிஸ்ட்ஸ், தென் சென்னை மாவட்டம் சார்பில் ” சமத்துவ பொங்கல் விழா” சென்னை தலைமை அலுவலகத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.
IJU தேசிய பொதுச் செயலாளரும், TUJ மாநில தலைவருமான திரு. D S R சுபாஷ் தலைமையுரையினை நிகழ்த்த, வரவேற்புரையினை தென் சென்னை மாவட்ட தலைவர் திரு. A. லட்சுமணன் நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில், திரு. சிவஞான குரு அக்னி ருத்ரன், (குருஜி காமத்தின் தேவி உபாசகர்) திரு. பிஷப் டாக்டர் நோபில் காட்ஃபரே ( தேசிய தலைவர், அனைத்திந்திய ஜனநாயக பாதுகாப்புக் கழகம்) திரு. மெளலவி தர்வேஷ் ரஷாதி ( தலைமை இமாம், மஸ்ஜித் ஹக்கானி) ஆகியோர் இணைந்து பொங்கலிட்டு விழாவிற்கு புத்துணர்வினை தந்தனர்.
சிறப்பு அழைப்பாளராக திரைப்பட நகைச்சுவை நடிகர் திரு. செந்தில் கலந்துக் கொண்டார்.
இந்நிகழ்வில் ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழின் முதன்மை ஆசிரியரும், டியூஜெ வின் மாநில அமைப்புச் செயலாளருமான ” நட்பின் மகுடம்” திரு. MJF Ln Dr லி. பரமேஸ்வரன், டியூஜெ வின் மாநில இணை செயலாளரும், கழுகு ரிப்போர்ட்டர் நிறுவனர்&ஆசிரியருமான ” கழுகு” திரு K.ராஜேந்திரன், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ் & ஜீனியஸ் டீவி சிறப்பாசிரியருமான ” கிங்மேக்கர்” திரு.Ln B.செல்வம், மூத்த பத்திரிகையாளர் திரு.M.D. ராமலிங்கம் மற்றும் ஏராளமான பத்திரிகை நண்பர்கள் கலந்துக் கொண்டு சிறப்பித்தனர்.

ஒளிப்பதிவு, படங்கள் செய்தியாக்கம்:
“கிங்மேக்கர்” திரு. Ln B. செல்வம்
🙏🤝🙏🤝🙏🤝🙏
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி









