இந்த ஆண்டு கோடை வெயில் 113 டிகிரி வரை எட்டக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“அக்கினி நட்சத்திரம் அல்லது “கத்தரி வெய்யில் என்று சுட்டெரிக்கும் காலம். சித்திரை மாதத்தின் கடைசி பின் பத்து நாட்களிலும், வைகாசிமுதல் பதினைந்து நாட்களிலும் அதிகமாக இருக்கும்
மே 4ம் தேதி கத்திரி வெயில் தொடங்குகிறது. இது மே 28 ம் தேதி வரை நீடிக்கும். அதற்கு முன்பே தமிழகத்தின் பல இடங்களில் வெப்பம் 100 டிகிரியை எட்டிவிட்டது.
இது குறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரி கூறுகையில், காற்றில் ஈரப்பதம் குறைந்த காரணத்தால் அனல்காற்று பயங்கரமாக வீசும் சூழல் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் 2003–ம் ஆண்டு மே 31–ந் தேதி உச்சகட்ட வெயில் அளவாக 113 டிகிரி வெப்பம் பதிவாகி இருந்தது. அதே போல் இந்த ஆண்டும் 113 டிகிரி வரை வெப்பம் வாட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பொழுதே கத்திரி வெயிலை எதிர்கொள்ளத் தயாராகுங்கள்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி