இரயில் பயணிகளின் நலன் காக்க விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் காவல் அதிகாரி….

பரபரப்புக்கு பஞ்சமில்லாத சென்னை எம். ஜி. ஆர் சென்ட்ரல் ரயில் நிலையத்தில்  மைக்கே இல்லாமல் தன்னை சுற்றியுள்ள கூட்டத்தின் முன் கணீர் குரலில் இரயில் பயணிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார் இரயில் நிலைய காவல்துறை ஆய்வாளர் S. சசிகலா அவர்கள்.

பெண்கள் எந்த வகையில் நடந்துகொள்ள வேண்டும். குறிப்பாக இரயில் நிலையங்களில், பொது இடங்களில் எப்படி விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என எடுத்துரைத்தார்.

இன்றைய சூழலில் கைபேசியில் தங்களை மறந்து, சுற்றம் மறந்து பேசி கொண்டே செல்கின்றனர் அவ்வாறு விழிப்புணர்வின்றி நடப்பதால் கைபேசியினை ” லபக்” செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டனர். அதோடு தாங்கள் அணியும் நகைகளுக்கும் பாதுகாப்பு வேண்டும் என்றால் புடவையையோ அல்லது துப்பட்டாவையோ கொண்டு கழுத்து முழுவதும் மறைத்துகொள்ள வேண்டும் என கூறினார்.

மக்கள் கவனமாக இருந்தால்தான் இது போன்ற கயவர்களின் ஆட்டம் குறையும் என்றார். இந் நிகழ்வின் போது உடன் உதவி ஆய்வாளர் திரு. G. மார்க்கபந்து, போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அசோசியேஷன் திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தின் தலைவரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டர் தமிழ் மாத இதழ், ஜீனியஸ் டீவி செய்தியாளருமான திரு. ச. பாக்கியராஜ், துணை தலைவர் திரு. B. மோசஸ் கார்த்திக், இணை செயலாளரும், தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவருமான திரு. S. ஜெயகுமார் உடனிருந்தனர்.

ஒளிப்பதிவு, செய்தியாக்கம் :
” ஜீனியஸ் ” K. சங்கர்

Check Also

அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா…

சென்னை, இராயபுரம் கல்மண்டபம், அங்காளபரமேஸ்வரி திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கடந்த 01.03.2022 செவ்வாய் கிழமை தொடங்கியது. 02.03.2022 புதன்கிழமை அமாவசையன்று …