அமாலா பால் எனக்கு கிடைத்த பொக்கிஷம் – டைரக்டர் விஜய்

டைரக்டர் விஜய் – அமலா பால் திருமணம் ஜுன் 12ம் தேதி நடைபெற இருப்பதாகவும், திருமண நிச்சயதார்த்தம் கேரளாவில் நடைபெற இருப்பதாகவும் செய்திகள் பரவின. மேலும் விஜய்யை அமலா பால் மதம் மாறச் சொன்னதாகவும் செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.

[pullquote]அவர் உண்மையிலயே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன். -டைரக்டர் விஜய்[/pullquote]

இந்நிலையில் முதன் முறையாக அமலா பாலுடனான காதல் குறித்து அறிக்கை ஒன்றினை வெளியிட்டு இருக்கிறார் இயக்குநர் விஜய்.அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பதாவது,

ஒருவராக இருந்து நாங்கள் இருவராக மாற உள்ள எனது நிலையைப் பற்றி சொல்வதற்கு இதை ஒரு சிறந்த சந்தர்ப்பமாகக் கருதுகிறேன். எனது வாழ்க்கைத் துணைவியை தேடியதுபோது, எனது மனம் கவர்ந்த காதலை அமலாவிடம் கண்டேன்.அவர் ஒரு நல்ல மனம் கொண்டவர் என்பது எனக்குத் தெரியும். அவர் உண்மையிலயே ஒரு பொக்கிஷம். அதை கண்ணும் கருத்துமாக காதலுடன் பாதுகாப்பேன்.

எங்களது திருமண திட்டத்தை கண்ணியமாகவும், முறையாகவும் நாங்களே அறிவிக்க வேண்டும் என்று இருந்தோம். ஆனால், எங்களுக்குத் தெரியாமலே அந்த செய்தி வெளியில் வந்து விட்டது.

மீடியாக்களிடமிமும், நண்பர்களிடமும், எங்களுக்கு வேண்டப்பட்டவர்களிடமும் எங்களது திருமண திட்டத்தைப் பற்றி நாங்கள் மூடி மறைக்க வேண்டும் என்று நினைத்ததேயில்லை. மீடியாக்களையும், நண்பர்களையும் தனிப்பட்ட அழைப்புடன் எங்களது மரியாதையை வெளிப்படுத்தும் விதத்தில் சந்திப்போம்.

அமலா பால் சில பொறுப்புகளையும், நானும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான ‘சைவம்’ படத்தின் வெளியீட்டை விரைவில் எதிர்பார்க்கிறேன். அதன் பின்தான் எங்களது வாழ்க்கையின் மிக முக்கியமான கொண்டாட்டங்களுக்கு நேரம் ஒதுக்க முடியும். அதுவரை என்றென்றும் உங்களது வாழ்த்துகளையும், ஆசீர்வாதங்களையும், ஆதரவையும் வேண்டுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *