அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா

அதிபர் ஒபாமா அரசின் அதிருப்தி எதிரொலியாக அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜினாமா செய்துள்ளார். ஒபாமா இந்த ராஜினாமாவை உறுதி செய்துள்ளார்.

புதிய அமைச்சரை தேர்வு செய்யும் பணி தீவிரமகா நடைப்பெற்று வருகிறது.  அமெரிக்க ராணுவ மந்திரி சக் ஹேகல் நேற்று திடீரென தனது மந்திரி பதவியை நேற்று ராஜினாமா செய்தார். நிர்ப்பந்தம் காரணமாக அவர் பதவி விலகியதாக தெரிகிறது.

ஈராக்கின் ஐ.எஸ். தீவிரவாதிகளை ஒடுக்க தவறியது உள்ளிட்ட பல்வேறு உலக பிரச்சினைகள் தொடர்பாக, சக் ஹேகல் மீது அமெரிக்க அதிபர் ஒபாமா அதிருப்தியில் தகவல்கள் கூறுகின்றது.  மேலும் இரண்டு வாரங்களாக நீடித்த ஆலோசனையின்படி இறுதி முடிவாக, சக் ஹேகல் நேற்று பதவி விலகினார்.

ஒபாமா அரசின் 3–வது ராணுவ மந்திரி இவர் ஆவார். மாற்று ஏற்பாடு செய்யப்படும்வரை, அவர் பதவியில் நீடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனநாயக கட்சியைச் சேர்ந்த ஒபாமாவின் அரசில், குடியரசு கட்சியைச் சேர்ந்த ஒரே மந்திரி சக் ஹேகல் ஆவார் என்பது கூறிபிடத்தக்கது.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *