அழகிரி புதிய கட்சி? தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே முடிவு.

தனது ஆதரவாளர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னரே புதிய கட்சி தொடங்குவது குறித்து முடிவு எடுக்கப்படும் என மு.க.அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை, பம்மலில் உள்ள  நல்லதம்பியை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றார் மு.க.அழகிரி. உடல் நலன் பாதிக்கப்பட்டுள்ள நல்லதம்பியை சந்தித்து உடல் நலம் விசாரித்து விட்டு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி அவர்களது பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.

மேலும், புதிய கட்சி தொடங்கவேண்டும் என தொண்டர்கள் ஆர்வம் காட்டினாலும், ஆதரவாளர்களுடன் ஆலோசித்துவிட்டு இரண்டு மாதங்களுக்குப் பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும் திமுகவிற்கு எதிராக பிரச்சாரம் செய்யப்போவதில்லை எனவும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published.