ஆஸ்திரேலியா விமானத்தை கடத்த முயற்சியா?

ஆஸ்திரேலியாவிலிருந்து இந்தோனேஷியாவின் ஃபாலி தீவுக்கு வந்துகொண்டிருந்த விர்ஜின் நிறுவனத்துக்கு சொந்தமான விமானத்தின் பைலட் அறைக்குள் பயணி ஒருவர் நுழைய முற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த நபர் பைலட்டை தாக்கிவிட்டு விமானத்தை கடத்த முயற்சி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின்பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

தனது அறைக்குள் ஒருவர் நுழைய முயலுவதை பார்த்து பரபரப்படைந்த விமானத்தின் பைலட், விமானத்தை கடத்த முயற்சி நடப்பதாக ஃபாலி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவசரகதியில் விமானம் தரையிறக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் பாதுகாப்பு படைவீரர்கள் வாகனங்களில் விமானத்தை சுற்றி வளைத்தனர்.

விமானி அறைக்குள் நுழைய முயன்ற அவர் குடிபோதையில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. போதை காரணமாக பைலட் அறைக்குள் நுழைய முற்பட்டாரா, அல்லது விமானத்தை கடத்தும் நோக்கத்தில் வந்தாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால் இது உண்மையல்ல, குடிபோதையில் இருந்த ஒருவர் மிகவும் அநாகரிகமாக நடந்து கொண்டதால் அவர் கைவிலங்கிடப்பட்டு விமானத்தில் வைக்கப்பட்டார். இந்த செய்தி தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக விமான கம்பெனி அறிவித்துள்ளது

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *