ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம்

ஐ.நா. வின் மனித உரிமைகள் ஆணையம் இலங்கை அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இலங்கையில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றங்கள் குறித்து ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விசாரணை நம்பகத்தன்மை மற்றும் நேர்மை ஆகியவற்றின் மீது இலங்கை அரசு தொடர்ச்சியாக தாக்குதல் நடத்தி வருவதாக ஐ.நா. மனித உரிமை ஆணையர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

விசாரணைக்க ஒத்துழைப்பு தரும் தனிநபர்களையும் அந்நாட்டு அரசாங்கமும் தடுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

விசாரணைக்கு எதிரான தவறான தகவல்களை கூறுவது, சாட்சியம் அளிக்கும் விரும்பவர்களை தடுப்பது போன்ற செயல்கள் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் குழுவை அவமதிக்கும் செயல் என்று உசேன் கூறியுள்ளார். விசாரணை குழுவுக்கு ஒத்துழைக்குமாறு ஆணைய குழு திரும்ப திரும்ப கூறிய போதிலும் அதை இலங்கை அரசு நிராகரித்த தன்மையானது அந்நாட்டு அரசு மீதான நேர்மை குறித்து கவலை ஏற்படுத்தி இருப்பதாகவும் ஆணையர் சுட்டிகாட்டியுள்ளார். ஐ.நா. விசாரணைக்கு இலங்கை அரசு ஒத்துழைப்பு தர வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.

Check Also

ஹஜ் யாத்திரை நெரிசலில் சிக்கி 220 பேர் பலி; காயம் 450

சவுதி அரேபியாவில், ஹஜ் புனித யாத்திரை கூட்ட நெரிசலில் சிக்கி குறைந்தது 220 பேர் பலியாகியதாக அஞ்சப்படுகிறது. மேலும் 450 …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *