ஐ படம் இசை இன்று வெளியீடு: ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் பங்கேற்பு

சென்னையில் திங்கள்கிழமை நடைபெறும் “ஐ’ பட ஆடியோ வெளியீட்டு விழாவில் ஹாலிவுட் நட்சத்திர நடிகர் அர்னால்ட் பங்கேற்கிறார்.

“ஆஸ்கர் பிலிம்ஸ்’ நிறுவனத்தின் சார்பில் வி.ரவிச்சந்திரன் தயாரிப்பில் சங்கர் இயக்கத்தில் பிரம்மாண்ட பொருள் செலவில் உருவாகி வரும் படம் “ஐ’. விக்ரம், எமி ஜாக்சன் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவாகி வரும் இந்தப் படத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் பாடலாசிரியர் கபிலன் உள்ளிட்டோர் பாடல்களை எழுதியுள்ளனர்.

கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக படப்படிப்பில் இருந்துவரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா திங்கள்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறுகிறது. இவ்விழாவில் பங்கேற்று ஆடியோவை வெளியிடுகிறார் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட். ஹாங்காங்கில் இருந்து தனி விமானம் மூலம் திங்கள்கிழமை காலை சென்னை வரும் அர்னால்ட், மாலை 5 மணியளவில் நடைபெறும் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று “ஐ’ படத்தின் ஆடியோவை வெளியிடுகிறார்.

இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், புனித் ராஜ்குமார், வெங்கடேஷ் உள்ளிட்ட தென்னிந்திய நட்சத்திரங்கள் பலர் பங்கேற்கின்றனர்.

தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் கே.ஆர். உள்ளிட்ட தமிழ்த் திரை அமைப்புகளின் நிர்வாகிகள், நடிகர், நடிகைகள் பங்கேற்கின்றனர். விழாவில் ஏ.ஆர்.ரகுமான் குழுவினரின் இசை நிகழ்ச்சியும், விக்ரம், எமி சாக்சன், பிரபுதேவா உள்ளிட்டோரின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன. வெளிநாட்டு நடனக் கலைஞர்களின் நடன நிகழ்ச்சிகளும் நடைபெற உள்ளன.

இந்த விழாவுக்காக ஆங்கில எழுத்து “ஐ’ வடிவிலான பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. விழாவில் பங்கேற்கும் நடிகர் அர்னால்டுக்கு அரசுத் தரப்பிலும், தயாரிப்பு நிறுவனத்தின் தரப்பிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *