சினிமா நூற்றாண்டுவிழா மோசடி – கழுவி, கூட்டி, பெருக்க 75 இலட்சம் செலவு

சினிமா நூற்றாண்டுவிழா சென்னையில் கொண்டாடப்பட்டது அது உங்களுக்கு நினைவிருக்கலாம். அதில் நடந்த ஊழல்கள் தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை தேர்தலை முன்னிட்டு வெளியே கசிய ஆரம்பித்துள்ளது.

தென்னிந்திய சினிமாக்கள் சென்னையை பயன்படுத்திய காலத்தில் தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபை என்று பொதுவான பெயரில் சங்கம் அமைத்தது. தற்போது ஒவ்வொரு மாநிலத்திலும் அந்தந்த மொழி சினிமாவுக்கு தனித்தனி சங்கங்கள் உள்ளன. அந்த சங்கங்களை வேறு மாநில சங்கங்கள் கட்டுப்படுத்த முடியாது.

எனவே தமிழ்நாடு நடிகர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட வர்த்தகசபை என்று பெயரை மாற்றக்கோரி பலர் கூறினாலும் எதுவும் இதுவரை நடக்கவில்லை.
தென்னிந்திய திரைப்பட வர்த்தகசபையின் தலைவராக கல்யாண் இருக்கிறார். எத்தனை தேர்தல் வந்தாலும் கல்யாண்தான் தலைவர். காரணம் பிராக்சி முறையில் ஒருவரே 150 ஓட்டுகள் போடலாம். கல்யாண் கோஷ்டி 650 பிராக்சிகளை வைத்திருப்பதாக எதிரணியினர் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த பிராக்சிமுறை காரணமாக அவரை எதிர்த்து யார் போட்டியிட்டாலும் வெற்றி பெறுவது முடியாத காரியம்.
இதன் காரணமாக கல்யாணை எதிர்த்து போட்டியிடுவதாக அறிவித்திருந்த விஜயகுமாரும் அவரது அணியினரும் நடக்கவிருக்கிற தேர்தலை புறக்கணிக்க இருப்பதாக அறிவித்துள்ளனர். அத்துடன் சினிமா நூற்றாண்டுவிழா நடத்தியதில் பல கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
விழா நடந்த நேரு உள்விளையாட்டரங்கை சுத்தம் செய்தவகையில் 75 லட்சங்கள் செலவானதாக கணக்கு காண்பித்துள்ளனர். அதேபோல் பிஸ்கட் வாங்கியவகையில் செலவு 20 லட்சங்கள். இந்த ஆடம்பர விழாவுக்கு தமிழக அரசு சார்பில் 10 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. வசூலானது 12 கோடிகள். ஆக, 22 கோடிகள். இவ்வளவு பெருந்தொகை இருந்தும் 2.5 நஷ்ட கணக்கு காட்டியுள்ளனர்.
கல்யாண் மீது ஏற்கனவே பல புகார்கள் உள்ளன. இப்போது நூற்றாண்டுவிழா மோசடியும் சேர்ந்துள்ளது. சினிமா சங்கங்கள் தனி மனிதர்களின் அதிகாரத்தின் கீழே செயல்பட்டு வருகின்றன என்ற குற்றச்சாட்டை இந்த புகார் மீண்டும் உறுதி படுத்தியிருப்பதாக தெரிகிறது.

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published.