ட்வெண்டி 20 உலகக்கோப்பை தொடக்க விழாவில் ஏ.ஆர்.ரகுமான், அகான் கலைநிகழ்ச்சி

வங்கதேசத் தலைநகரில் நாளை மறு நாள் நடக்கும் ட்வெண்டி 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடக்க விழாவில்      ஏ ஆர் ரஹ்மான் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

இந்த விழாவில் புகழ்பெற்ற ராப் பாடகர் அகானும் (Akon) கலந்து கொள்கிறார். இந்நிகழ்ச்சி டாக்காவின் பங்காபந்து மைதானத்தில் தொடங்குகிறது.

விழா தொடர்பாக ஏ ஆர் ரஹ்மானை சந்தித்து பேசிய வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, ஏ.ஆர்.ரஹ்மானை சந்தித்ததில் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் அவர் பங்குபெறுவதன் மூலம் இப்போட்டிக்கு உலக அளவில் மிகப்பெரிய வரவேற்பு கிடைக்கும் என்றும் தெரிவித்துள்ளார். இப்போட்டியில் விளையாடும் இந்திய அணி இன்று வங்கதேசத்திற்கு சென்றுள்ளது.

Check Also

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளர் யார்?

புதிய பயிற்சியாளர் குறித்த முடிவை சச்சின், லஷ்மன், கங்குலி ஆகியோர் அடங்கிய ஆலோசனைக் குழு எடுக்கும் என்று பிசிசிஐ செயலர் …

Leave a Reply

Your email address will not be published.