தேர்தலில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை அதனால் தவறாமல் வாக்களியுங்கள் என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் கூறினார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், உலகில் உள்ள அனைத்து தமிழர்களுக்கும் சித்திரை திருநாள் தமிழ் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்.
முக்கியமான பல கடமைகளில் வாக்களிப்பது நமது ஜனநாயக கடமை. எனவே நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் தவறாமல் வாக்களித்து இந்திய நாட்டை ஆளக் கூடிய திறமையான அரசியல் தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி