2014–15ம் கல்வி ஆண்டுக்கான பகுதி நேர பி.இ. மற்றும் பி.டெக். படிக்க விண்ணப்பம் மார்ச் 19ம் தேதி முதல் ஏப்ரல் 7ம் தேதி வரை வழங்கப்படும் என தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.
விண்ணப்ப படிவங்கள் சென்னை கிண்டியில் உள்ள தமிழ்நாடு தொழில்நுட்ப கல்வி இயக்ககம், மதுரை தியாகராயர் என்ஜினீயரிங் கல்லூரி, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை, பர்கூர், சேலம், நெல்லை அரசு பொறியியல் கல்லூரிகள், கோவை பி.எஸ்.ஜி. என்ஜினீயரிங் கல்லூரி, காரைக்குடி அழகப்ப செட்டியார் பொறியியல் கல்லூரி, வேலூர் தந்தை பெரியார் என்ஜினீயரிங் கல்லூரி ஆகிய 10 கல்லூரிகளில் கிடைக்கும்.
மாணவர்களூக்கான கலந்தாய்வு மே மாதம் நடைபெறுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட படிவங்கள் செயலாளர், பகுதிநேர பி.இ./ பி.டெக். மாணவர் சேர்க்கை, கோயம்புத்தூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, கோவை 641014 என்ற முகவரிக்கு ஏப்ரல் 7–ம் தேதிக்குள் வந்தடையும்படி அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி