2014 ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு அரசியல் சாக்கடையை சுத்தப்படுத்த ஆசையா? உங்களுக்கு தகுதி இருந்தால் வாய்ப்பளிக்க முன் வருகிறது, தில்லி சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி கண்ட ஆம் ஆத்மி கட்சி.
நீங்கள் அவர்கள் இணையதளத்தில் (http://www.aamaadmiparty.org) உள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனுப்பினால் போதும். தூய்மையான அரசியலை முன்னிறுத்தும் அவர்களோடு, தகுதியிருந்தால் நீங்களும் ஒருவராக போட்டியிடலாம். நமது நாட்டை மாற்றி அமைக்க எண்ணும் மக்கள் ஏன் மாற்றத்தை கொண்டு வரும் பணியில் இறங்க கூடாது?
எப்படி இருந்தாலும் இந்திய அரசியலில் சாமாணியனுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளதை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
ஜெய்ஹிந்த்
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி