பிரியங்கா கணவர் ராபர்ட் வதேரா வாங்கிக் குவித்த நிலங்கள் பாஜக வெளியிட்ட வீடியோ

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேராவுக்கு எதிராக எட்டு நிமிட வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத் நேற்று வெளியிடடார்.

இந்த வீடியோவுக்கு சோனியா காந்தி குடும்பம் பதிலளிக்க வேண்டும் என்றும் பாஜக கூறியுள்ளது.

ராபர்ட் வதேரா பற்றி பிரியங்கா விளக்கட்டும் இதுகுறித்து கூறிய பிரசாத், குஜராத் வளர்ச்சி குறித்து விமர்சிக்கும் பிரியங்கா காந்தி, தன்னுடைய கணவர் ராபர்ட் வதேராவின் தனிப்பட்ட வளர்ச்சி குறித்து பதில் சொல்ல வேண்டும்.

நூற்றுக்கணக்கான நிலங்கள் வந்தது எப்படி. ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை ராபர்ட் வதேரா வாங்கியுள்ளார். காங்கிரஸ் ஆட்சி புரியும் மாநிலங்களில் மட்டும் ராபர்ட் வதேரா நிலம் வாங்குவது ஏன்.

வதேராவைக் காக்க முயல்கிறது காங்கிரஸ் 2ஜி அலைக்கற்றை விவகாரத்தில் எவ்வாறு ப.சிதம்பரம் காப்பாற்றப்பட்டாரோ, ரயில்வே ஊழல் வழக்கில் எவ்வாறு பவன்குமார் பன்சால் காப்பாற்றப்பட்டாரோ, நிலக்கரி ஊழல் வழக்கில் பிரதமர் மன்மோகன் சிங் எவ்வாறு காப்பாற்றப்பட்டு வரகிறாரோ, அதேபோல் ராபர்ட் வதேராவையும் காப்பாற்ற முயற்சி நடைபெற்று வருகிறது.

வதேரா நிலம் வாங்கியதில் விதிமுறைகள் மிகப் பெரிய அளவில் மீறப்பட்டுள்ளது. காந்தி குடும்பத்தின் செல்வாக்கை வதேரா பயன்படுத்தி வாங்கிக் குவித்துள்ளார் என்றார் ரவிசங்கர் பிரசாத்.

இதுதவிர ‘Damad Shree’ (மருமகன்) என்று பெயரிடப்பட்ட 6 பக்க புத்தகத்தையும் பாஜக வெளியிட்டது. அதில் ராஜஸ்தான், ஹரியானாவில் ராபர்ட் வத்ரா வாங்கிய நிலங்கள் குறித்த விவரத்தை அது வெளியிட்டுள்ளது.

Check Also

​மாட்டிறைச்சி விவகாரம்: காஷ்மீர் சட்டசபையில் சுயேட்சை எம்எல்ஏ மீது பாஜக எம்எல்ஏ தாக்குதல்

மாட்டிறைச்சி விருந்து விவகாரம் தொடர்பாக காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று பெரும் அமளியை ஏற்பட்டது. சுயேட்சை எம்.எல்.ஏவுடன் பாஜக எம்எல்ஏ கைகலப்பில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *