லிங்கா ரிலீஸுக்கு முன்பே சாதனை படைத்தது!

கோச்சடையான்’ படத்திற்குப் பிறகு ரஜினி நடிக்கும் படம் ‘லிங்கா’. இதில் அவர் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோயடியாக அனுஷ்கா, சோனக்ஷி சின்ஹா நடித்துள்ளனர். ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் இயக்குகிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் இந்தப் படம் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்நிலையில் ‘லிங்கா’ படத்தின் வெளியிடும் உரிமையை ஈராஸ் நிறுவனம்  ரூ.165 கோடி கொடுத்து வாங்கியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதே ஈராஸ் நிறுவனம் தான் ‘லிங்கா’ படத்தின் ஆடியோ உரிமையையும் பெற்றிருந்தது. மேலும் படத்தை வெளிநாடுகளில் திரையிடும் உரிமையை ஈராஸ் நிறுவனத்திடமிருந்து ஐங்கரன் நிறுவனம் பெற்றிருப்பதாகவும் தகவல்.

இந்திய அளவில் இவ்வளவு பெரிய தொகைக்கு ஒரு திரைப்படத்தின் உரிமை விற்கப்படுவது இதுதான் முதல்முறை. அதேசமயம் படத்தையும் உலகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் செய்ய ஈராஸ் மற்றும் ஐங்கரன் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. ரஜினியின் படங்கள் ரிலீஸுக்கு பிறகு சாதனை படைக்கும் என்றால் ரிலீஸுக்கு முன்பே சாதனை படைப்பது இவரால் மட்டும்தான் முடியும்.!

Check Also

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரசப் பேச்சுக்கே இடமில்லை: நடிகர் விஷால்

தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில் சமரச முயற்சிகளை ஏற்கமாட்டோம் என்று நடிகர் விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார். தேர்தலில் போட்டியிடுவதால் நடிகர் …

Leave a Reply

Your email address will not be published.