பாரதிய ஜனதா கூட்டணியில் தேமுதிகவிற்கான தொகுதிகள் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப் படும் நிலையில், இன்று மாலை திருவள்ளூரில் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார் அக்கட்சித் தலைவர் விஜயகாந்த்.
நேற்று பாஜக தனது கூட்டணி விவரத்தை அதிகாரப்பூர்வமாக அறிவிக்க முடிவு செய்திருந்தது. இதற்காக அக்கட்சியின் தலைவர் ராஜ்நாத் சிங் சென்னை வருவதாக இருந்தது. ஆனால், கூட்டணி பேச்சுவார்த்தையில் முடிவுகள் எடுக்கப்படாமல் போனதால் ராஜ்நாத் சிங்கின் சென்னைப் பயணம் ரத்தானது.
இந்நிலையில் இன்று தேமுதிக போட்டியிடும் தொகுதிகளின் விவரம் வெளியிடப்படும் எனத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து தேமுதிக தலைவரான விஜயகாந்த் இன்று முதல் தனது தேர்தல் பிரச்சாரத்தைத் துவக்குகிறார். இன்று மாலை 3 மணிக்கு திருவள்ளூரில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜயகாந்த் வரும் 27-ந்தேதி வரை 14 நாட்கள் முதல்கட்ட தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
Genius TV – Tamil News Web TV Genius TV – Tamil News Web TV, ஜீனியஸ் டிவி தமிழ் வெப் டிவி