தென்காசி மாவட்டம் குற்றாலம் பகுதியில் தற்போது சபரிமலை ஐயப்பன் சீசன் முன்னிட்டு பல்வேறு மாநிலங்களில் இருந்து ஐயப்ப பக்தர்கள் தினதோறும் வருகை புரிந்து கொண்டிருக்கின்றனர் இதை காரணமாக வைத்துக் கொண்டு குற்றாலம் பகுதிகளில் கூட்டுறவு சொசைட்டியில் தயாரிக்கப்பட்ட கால்வலி தைலம் தலைவலி தைலம் என கூறி போலியான தைலம் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.
கடந்த ஆண்டு தென்காசி தலைமை மருத்துவமனை மருத்துவர் குழு குற்றாலத்திற்கு வந்து இதை ஆய்வு செய்தார்கள் சென்னை சித்த மருத்துவ உட்பிரிவு ஆய்வகத்திற்கு கொண்டு சென்று ஆய்வு செய்த பொழுது அதிர்ச்சியான தகவல் வந்தது கலப்பட எண்ணெயுடன் வர்ண பூசப்படும் டர்பன் ஆயில் கலக்கப்பட்டு மனித உடலுக்கு தீங்கு விளைவிக்க கூடிய எஸ்சென்ஸ் கலந்து விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது இது போன்று விற்பனை செய்வர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆய்வறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது.
அதையும் மீறி பணத்திற்காக சில சைக்கிள் வியாபாரிகளும் சில கடைகளிலும் இதுபோன்ற தைலங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது குற்றாலம் பகுதியில் கூட்டுறவு அங்காடி தைலக்கடை திடீரென முளைத்திருக்கிறது ஆகவே தென்காசி மாவட்ட நிர்வாகம் குற்றாலம் பேரூராட்சி நிர்வாகமும் உடனடியாக நடவடிக்கை எடுத்து தைலங்கள் விற்பனை செய்பவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்