பிரதி வருடம் ஐப்பசி மாதம்தோறும் பௌர்ணமி தினத்தில் சிவாலயங்கள்தோறும் நடைபெறுகின்ற அன்னாபிஷேகம் மிகவும் பிரசித்தி பெற்றது.
சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்த பின்னர் அன்னத்தால் (வெள்ளை சாதம், காய்கறிகள் இன்னும் பல அலங்காரம் செய்து, பக்தர்கள் வழிபாட்டிற்கு பிறகு சிவபெருமான் மீது அலங்கரித்த அன்னத்தை தரிசனம் செய்த பக்தர்களுக்கு வழங்குவர். இந்த தரிசனம் காண்போர்க்கு, அன்னத்தை உண்போர்க்கு அவர்களது வாழ்வில் அன்னம் குறைவின்றி கிடைக்குமென ஐதீகம்.
இராயபுரம், கல்மண்டபம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி திருக்கோயிலில் எழுந்தருளியுள்ள சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் 06-11-2014, வியாழக்கிழமையன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷனின் மாநிலத் தலைவரும். ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் இணைஆசிரியருமான லயன் லி. பரமேஸ்வரன், போலீஸ் பப்ளிக் பிரண்ட்ஸ் அஷோஷியேஷனின் மாநில பொருளாளரும், ஜீனியஸ் ரிப்போர்ட்டரின் நிறுவனரும், ஆசிரியருமான பி. வெங்கடேஷன் மற்றும் ஏராளமான பக்தர்கள் அன்னாபிஷேகத்தை கண்டுகளித்தனர்.
அன்னாபிஷேகத்தை இத்திருக்கோயிலின் ஆலய குருக்கள் திரு. ரவீந்திரன், திரு. ராஜசேகர் மற்றும் திரு. மகேஷ் ஆகியோர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்