இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்

இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்கக் கூடாது என மும்பை உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ஜெயின் சமூகத்தினரின் பர்யூஷன் விரத காலத்தை முன்னிட்டு செப்டம்பர் 17ம் தேதி இறைச்சி விற்பனை செய்யக்கூடாது என்று மும்பை மாநகராட்சி தடை விதித்தது. இந்த உத்தரவை நிறுத்தி வைத்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஜெயின் சமூகத்தினர் தாக்கல் செய்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்றம், மும்பை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட மறுப்பு தெரிவித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

மேலும், இறைச்சி விற்பனை மீதான தடையை மக்கள் மீது திணிக்க கூடாது என்றும் நீதிபதிகள், டி.எஸ் தாகூர், குரியன் ஜோஷப் ஆகியோர் அடங்கிய அமர்வு கருத்து தெரிவித்துள்ளது.

Check Also

முலாயம் சிங் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச நீதிமன்றம் உத்தரவு

போலீஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தது தொடர்பாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரபிரதேச …